சர்க்கரை நோய் : புதிய ஆராய்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

சர்க்கரை நோய் : புதிய ஆராய்ச்சி

சென்னை,மே 25– சென்னையிலுள்ள டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்யம், ‘எம்பெட் யூஆர்’ என்ற மென்பொருள் நிறுவனத்துடன் நேற்றுமுன்நாள் (23.5.2024), புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதில், டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மய்ய தலைவர் மோகன், ‘எம்பெட் யூஆர்’ நிறுவனர் ராஜேஷ் சி சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, டாக்டர் மோகன் கூறியதாவது: இந்தியாவில், 11 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் உள்ளானவர்களுக்கு நாளடைவில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருப்பவர்களுக்கும், சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த முரண்பாடுகளை களைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு தீவிர தாக்கம் ஏற்படாமல் தடுக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளின் உடலில் பொருத் தப்படும் தொடர் ரத்த சர்க்கரை கண்காணிப்புக் கருவி என்ற ‘சி.ஜி.எம்.,’ வாயிலாக தரவுகளை பெற்று, ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முதற்கட்டமாக, 10,000 நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை 24 மணி நேரமும் செயற்கை நுண் ணறிவு நுட்பத்தில் கண்காணித்து, அதன் மாற்றங்களை ஆய்வு செய்வோம். அதன் அடிப்படையில், நோயாளி களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தாக்கங்கள் ஆவணப்படுத்தப் படும். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் எந்தெந்த நபருக்கு, எத்தகைய பாதிப்புகள் சர்க்கரை நோயால் ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment