சென்னை, மே 29- அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து விடுதிகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணைய வசதிகள், சிசிடி கேமரா, மாணவர்களுக்கு கொசு மூலம் எந்த ஒரு காய்ச்சலும் பரவாமல் இருக்க சன்னல்கள் அனைத் திலும் கொசு வலைகள் பொருத்தியும், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாண வர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவர்கள் பெரிதும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற பல முன்னேற்பாடுகளை செய்துவரும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,முதலமைச்சர் அவர்களின் சீரிய பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பாக செயல்படும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை பள்ளிகளை சார்ந்த அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்க ளுக்கும் பொது மாறுதல் கலந்தாய் விற்கான தேதியை அறிவித்து எமிஸ் மூலமாக ஆசிரியர்கள் பொது விருப்ப மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையை போன்றே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக் கும் பொதுவிருப்ப மாறுதல் கலந் தாய்வை நடத்த வேண்டும்.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதி காப்பாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
அதாவது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு ஆசிரியர் காப்பாளராக பணியாற்ற வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் காப்பாளர்களை விடுதி களில் இருந்து விடுவித்து பொது மாறுதல் கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் பள் ளிகளுக்கு அனுப்பவேண்டும்.
அவர்களுக்குப் பதிலாக விருப்பம் உள்ள ஆசிரியர்களை விடுதி காப்பாளர் களாக நியமனம் செய்ய வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இளையோர்களை விடுதிக் காப்பாள ராக நியமிக்க வேண்டும். ஏனென்றால் கடந்த ஆட்சியில் செய்த தவறுகளால் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சொற்ப அளவிலே இருந்து வருகிறது.
இதனால் பல விடுதிகளில் மாண வர்கள் இரவில் தங்குவது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. மாணவர்க ளுக்கு ஒதுக்கப்படும் நிதி வீணாக்கப் படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய வேண்டுமானால் மூன்று ஆண்டு களுக்கு மேலாக காப்பாளர்களாக பணியாற்றுபவர்களை மீண்டும் பள்ளி களுக்கு அனுப்பி புதியவர்களை நியமித்து மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தி மாணவர்களுக்கு என ஒதுக் கப்படும் நிதி மாணவர்களுக்கே சென் றடைய வழிவகை செய்ய வேண்டும்.
இரவில் மாணவர்கள் இல்லாத விடுதிகளை இரவுப் பாடசாலையாக மாற்றி அப்பகுதி பள்ளி மாணவர்கள் இரவில் படிப்பதற்கும் மேற்படிப்பிற் கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளுக்கு தயார்படுத்த அவர்க ளுக்கு பயிற்சி பாசறையை ஏற்பாடு செய்தால் மாணவர்களுக்கும், இளை ஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற உதவியாக இருக்கும் என்பதை தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சா.அருணன் தெரவித்துள்ளார்.
No comments:
Post a Comment