போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் விற்பனை செய்ய தடை தமிழ்நாடு அரசு கடும் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் விற்பனை செய்ய தடை தமிழ்நாடு அரசு கடும் ஆணை

featured image

சென்னை, மே 29 தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிக்கோடின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதனை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலகட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டபோதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருட்கள் பயன்படுத்துவதில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் பஞ்சாப் மாநிலமும், அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான், மராட்டியம், ஆந்திரா. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வழக்குகள் பதிவாகின்றன.

அதில் அதிர்ச்சியான மற்றொரு தகவல் என்னவென்றால் நாடு முழுவதும் 20 வயதிற்குட்பட்ட வர்கள் அதிக அளவில் போதைப்பொருட்கள் பயன்படுத்து வது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிக ரித்து கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உயர்நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்புகூட மதுரை உயர்நீதிமன்றம், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குத் துணைபோகும் காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.  அதன் மறுநாளே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்து சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.  கடந்த 10 நாள்களில் மட்டும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சிலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

அதிரடி அறிவிப்பு

இதற்கிடையில் பான்ம சாலா, குட்கா மட்டுமின்றி புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்து பல பொருட்கள். பல வடிவில் சந்தையில் விற்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.    எனவே, இந்த அனைத்து பொருட்களுக்கும் தடை விதிப்பதாக தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருத்து நிர்வாக ஆணையர் ஹரிகரன் ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை மற்றும் நிக்கோட்டின் கொண்ட உணவு பொருட்கள் தற்போது சந்தையில் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதனை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள். சிறுவர்கள், இளை ஞர்கள். கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 (ஒன்றிய சட்டம் 34/2006) பிரிவு 30-ன் உட்பிரிவு (2)-ன் மூலம் வழங்கப்பட் டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த அனைத்து உணவு பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, வினியோகம் மற்றும் விற்பனை ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

ஓராண்டு காலம்

புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கை கொண்ட பொருட்களான பான்மசாலா, குட்கா என எந்தவொரு பெயரில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், எந்த சுவையாக இருந்தாலும், எந்த மண மாக இருந்தாலும் அவை முற் றிலும் தடை செய்யப்படுகிறது. அதனை ஒரே தொகுக்கப் பட்ட அல்லது தொகுக்கப்படாத ஒரே தயாரிப்பாக விற்கப்பட்டாலும், அல்லது தனித்தனி தயாரிப்புகளாக தொகுக்கப்பட்டாலும் அதனை விற்பனை செய்யக்கூடாது. இந்த தடை உத்தரவு கடந்த 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment