செங்கல்பட்டு, மே 29- திருக் கழுக்குன்றத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் கொற்றவை சிற்பத்தை, வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஈசூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் கல் பலகை சிற் பம் ஒன்று உள்ளதாக அரி கிருஷ்ணன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், வரலாற்று ஆய் வாளர்கள் சங்கத்தை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரி யர் வடிவேல் தலைமையில் இப்பகு தியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் இறுதி பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்றை கண்டுபிடித்துள் ளனர். வயல்வெளியில் உள்ள மேடான இடத்தில், பாதி புதை யுண்ட நிலையில் இருந்த சிலையை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், பலகைக் கல் சிற்பம் சுமார் 5 அடி உயர மும், 2.5 அடி அகலமும் கொண் டதாக அமைந்துள் ளது.
மேலும், 4 கரங்களுடன் காட்சி யளிக்கும் கொற் றவை, வலது கரத் தில் மொட்டு மல ரும், இடது கரத்தில் சங்கும் உள்ளன.
தலை கரண்ட மகுடம் சூட்டி, சிற் றிடையில் ஆடையணிந்து, எருமை தலை மீது நின்ற கோலத் தில் காட்சியளிக்கும் இந்த கற் பலகை சிற்பம், இறுதி பல்லவர் காலமான கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்க லாம் என தெரிகிறது.
மேலும், மிகவும் பழமையான இந்த கற்சிற்பம் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை கடவுளர் சிற்பங்களில் அரிதான ஒன்று என வரலாற்று ஆய்வாளர் கள் தெரிவித்தனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு:
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தலைவர் மணியன் கலிய மூர்த்தி கூறியதாவது: சாத்தமங்கலம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பத்தை ஆய்வு செய்ய, முதலில் கிராம மக்கள் பல்வேறு காரணங் களை கூறி எதிர்ப்புதெரிவித்தனர். அதையெல்லாம் மீறிதான் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதன்மூலம், இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டறிந் துள்ளோம் என்றார். பவுத்த காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் மணிமே கலையில் கொற்றவைத் தெய்வம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தச் சிலையும் அந்தக்குறிப்புகளோடு சீராக ஒத்துப்போவதால் இறுதிக் கால பல்லவர்கள் பவுத்த சமயத்தை இறுதிவரை கடைப்பிடித்து வந் துள்ளனர் என்று தெரியவருகிறது.
No comments:
Post a Comment