
சென்னை, மே 25- தேர்தல் ஆணையம் பா.ஜ.கவிற்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டி யுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஒருமைப் பாட்டில் அக்கறை செலுத்த வேண்டிய பிரதமர் மோடி, ஒடிசாவுக்கு சென்று தமி ழர்களை அவமானப்படுத் தும் வகையில் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடியின் மீது புகார் கொடுத்தால் அவரை விசாரிக்காமல் பாஜகவின் தலைமைக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கையால் தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சி களுக்கு இருக்கும் நம் பிக்கையை குறைத்து விட் டதாக கூறினார். தேர்தல் ஆணையம் முழுக்க, முழுக்க மோடிக்கும் பாஜகவுக்கும் சாதகமாக செயல்படுகிறது என்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் இதையெல்லாம் நீதிமன்ற த்தில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்
No comments:
Post a Comment