ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் திணறிப் போனது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து தெரிவித்து உள்ளது.
பல ஆண்டுகளாக நேருக்கு நேர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே ராஜஸ் தான் தேர்தல் களம் இருந்து வந்தது. இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி மற்றும் பாரதிய ஆதிவாசிக் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங் கீட்டை சுமூகமாக காங்கிரஸ் மேற் கொண்டுள்ளது. 2014 மற்றும் 2019 தேர் தல்களில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றன. தற்போது நிறைவு பெற்றுள்ள தேர்தலில் அத்தகைய வெற்றி கிடைக்காது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு சுட்டிக் காட்டியுள்ளது.
அய்ந்து முதல் ஆறு மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக வெற்றி பெறும் நிலையில் உள்ளன. டவுசா, நாகோர், சுரு, சிகார், ஜூன் ஜூனு, பன்ஸ்வாரா ஆகிய தொகுதிகளைப் பட்டியலும் இட்டுள்ளது. இதில் நாகோர் தொகுதியில் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியும், சிகார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பன்ஸ்வாரா தொகுதியில் பாரதிய ஆதிவாசிக் கட்சி யும் பாஜகவுக்கு எதிராக காங்கிரசின் ஆதரவுடன் களத்தில் உள்ளன.
மேலும் பரத்பூர், ஜாலோர், கட் டோலி-தோல்பூர், கோட்டா மற்றும் டோன்க் சவாய் மாதோபூர் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸ் முந்திச் செல்வதாகத் தெரிகிறது. மோடி மந்திரம் தனது வலுவை இழந்திருக்கிறது என் பதை முதல் காரணமாகச் சுட்டிக்காட்டு கிறார்கள். அதோடு மேனாள் முதல மைச்சர் வசுந்தராஜே சிந்தியாவை ஓரங்கட்டியது கட்சிக்குப் பாதிப் பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை 400அய்த் தாண்டுவோம் (அப் கி பார், 400 பார்) என்ற முழக்கம் ராஜஸ்தானில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதை வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தை மாற்று வோம் என்று துணை முதலமைச்சர் தியா குமாரி மற்றும் நாகோர் மக்கள வைத் தொகுதி வேட் பாளர் ஜோதி மிர்தா ஆகியோர் பேசியது தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது. அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை வெட்டி விடுவார்கள் என்று அவர்கள் மத்தியில் கருத்து உள்ளது.
இடஒதுக்கீடு பற்றிய கவலையை, ஒவ் வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்கள் மக்களிடம் பகிர்ந்து கொண் டனர். கிராமம், கிராமமாக இந்தப் பிரச் சாரத்தால் பாஜக ஆடிப் போயுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது வெளிப்பட்ட கெலாட்-சச்சின் பைலட் மோதல், தற்போது வெளியில் தெரிய வில்லை. இந்த ஒற்றுமை காங்கிரசுக்கு உதவியிருக்கிறது.
இருந்தாலும் ஜூன் 4 ஆம் தேதி வரையில் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக் கட்டுரை கூறியுள்ளது.
Sunday, May 26, 2024
ராஜஸ்தானில் பிஜேபி திணறல்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment