சட்ட எரிப்பு போராட்ட வீரர் நாகமுத்து மறைந்த நாள் (1958).
ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடையாத்து மங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டதால் திடீ ரென்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டில் மருத் துவம் பார்த்துக் கொண்டபொழுதே 24-5-1958 இரவு 1.45 மணிக்கு தமது 53-ஆவது வயதில் மரணமுற்றார்.
5000 மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலை 6-30 மணிக்கு உடல டக்கம் செய்ய பெற்றது.வழக்கு ஒன்றுக்காக மதுரை சென்றுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டிருந்த அன்னை மணியம்மை யாரும், கடலூர் வீரமணியும் இந்தச் செய்தியைக் கேட்டு, உடனே இடையாத்து மங்கலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அவ்வூருக்கு வந்தபோது நேரம் இரவு 7 மணி. மழைமிரட்டல் காரணமாக 6-30 மணிக்கெல்லாம் உடல் அடக்கம் நடைபெற்றது.
மறைந்த தோழரின் வீட்டிற்கு அவர்கள் சென்று மறைந்த தோழர் நாகமுத்து அவர்களின் துணை வியார் சீனியம்மாளுக்கும் 18 வயது நிரம்பிய ஒரே மகனுக்கும் ஆறுதல் கூறினார்கள்.
அந்த நேரத்தில் அந்தத்தாய் சொன்ன பதில் அனை வரையும் மயிர்க்கூச்செரியச் செய்தது.
“நான் கலங்கவில்லை. என் மகன் அய்யாவின் அடுத்த போராட்டத்திற்கு இருக்கிறான். அவனையும் அனுப்பி, நானும் வந்து உயிர் தியாகம் செய்ய தயாராக உள்ளேன்” என்று கூறினார்.
கருஞ்சட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய் வீரத்தாய் அல்லவா? புறநானூற்றை கொண்டு வரும் மறத்தாய் அல்லவா?
No comments:
Post a Comment