சென்னை, மே 26- இந்தியாவில் தனியார்மயமாக்கப்படும் விமான நிலையங்களின் பட்டியலில், சென்னை பன்னாட்டு விமான நிலையமும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அதிக பயணி களை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3ஆவது இடத்தை பிடித்தது. மும்பை, டில்லி விமான நிலையங்கள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள் ளன. பெங்களூரு போன்ற பெரிய விமான நிலையங்களை பின்னுக் குத் தள்ளி சென்னை விமான நிலையம் 3ஆவது இடத்தை பிடித்தது. நடப்பாண்டில் 2.12 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாண்டுள் ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 14.2 சதவீதம் கூடு தலாகும்.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும் விமான நிலையங்களின் பட்டிய லில் இடம் பெற்றுள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன. ஒன்றிய பாஜக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு பன்னாட்டு விமான நிலை யங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் இறங்கியது.
அதன் தொடர்ச்சியாக, அதானி குழுமம் ஆறு விமான நிலையங்களை நிர்வாகம் செய்வதற்கான ஒப்பந் தத்தை கைப்பற்றியது. அதன்படி, திருவனந்தபுரம், மங்களூரு, அகம தாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவு ஹாத்தி ஆகிய ஆறு பன்னாட்டு விமான நிலையங்களை தற்போது அதானி குழுமம் நிர்வாகம் செய் கிறது. அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மும்பை விமான நிலையத்தின் மேலாண்மை பணி களையும் அதானி குழுமம் கவ னித்து வருகிறது.
இந்தியாவில் அதானி குழுமத் தின் கட்டுப்பாட்டின் கீழ், 23 விழுக்காடு விமான நிலைய செயல் பாடுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது கூடுதலாக விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக் கவும் அதானி குழுமம் திட்டமிட் டுள்ளது.
அதன்படி சென்னை, புவனே சுவர், வாரணாசி ஆகிய பன் னாட்டு விமான நிலையங்கள்; கயா, தர்மசாலா உள்ளிட்ட சிறிய விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் விமான நிலையங் களின் பட்டியலில் இடம் பெற்றுள் ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தலுக்குப் பின்னர் இது தொடர்பான ஒப்பந்த அறிவிப் புகள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையங்களையும் கைப்பற்றும் முயற்சியில் அதானி குழுமம் களம் இறங்க உள்ளதாகத் தெரிகிறது.
Sunday, May 26, 2024
Home
இந்தியா
தமிழ்நாடு
தனியார்மயமாக்க ஒன்றிய அரசு திட்டம் சென்னை விமான நிலையத்தை கைப்பற்றும் அதானி குழுமம்?
தனியார்மயமாக்க ஒன்றிய அரசு திட்டம் சென்னை விமான நிலையத்தை கைப்பற்றும் அதானி குழுமம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment