ஒடிசாவில் தமிழர் பாண்டியன் செல்வாக்கு ஓங்குகிறது: எதிர்க்கட்சிகள் கலங்குகின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

ஒடிசாவில் தமிழர் பாண்டியன் செல்வாக்கு ஓங்குகிறது: எதிர்க்கட்சிகள் கலங்குகின்றன

featured image

புவனேஸ்வர், மே. 25- ஒடிசா அரசியல் வட்டாரத்தில் வி.கே. பாண்டியன் என்றழைக்கப்படும் கார்த்திகேய பாண்டியன் கடந்த 1974-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தமிழ் நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன் பட்டி கிராமத்தில் பிறந்தார். தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளை யாட்டு விடுதியில் தங்கி படித்தார்.

மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலையும், டில் லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முது நிலை பட்டமும் பெற்றார். கடந்த 2000-இல் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று பஞ்சாபில் அய்ஏஎஸ் அதிகாரியானார்.

ஒடிசாவை சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்தார். இதன்பிறகு ஒடிசா மாநில அய்ஏஎஸ் பணிக்கு மாறினார்.

கடந்த 2002-ஆம் ஆண்டில் ஒடிசாவின் தரம்கர் மாவட்ட உதவி ஆட்சியராக பதவியேற்றார். அப்போது விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை திட் டத்தை வெற்றிகரமாக அமல்படுத் தினார். கடந்த 2004ஆ-ம் ஆண்டில் ஒடிசாவின் ரூர்கேலா கூடுதல் ஆட்சியராக பதவியேற்றார். அப் போது 20 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கி கொண்டிருந்த ரூர்கேலா மேம்பாட்டு ஆணையத்தை 5 மாதங்களில் மீட்டெடுத்தார். கடந்த 2005ஆ-ம் ஆண்டில் மயூர் பஞ்சு மாவட்ட ஆட்சியராக நிய மிக்கப்பட்டார். அப்போது மாற் றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்க ஒற்றை சாளர முறையை அமல்படுத்தினார்.

கஞ்சம் மாவட்ட ஆட்சியராக அவர் பணியாற்றியபோது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார். இந்ததிட்டத்தில் 1.2 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்தார். இதன் மூலம் தொழிலாளர்களின் ஊதி யம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதுவே நேரடி மானிய உதவித் திட்டத்துக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

கடந்த 2011ஆ-ம் ஆண்டில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக்கின் தனிச் செயலாளராக வி.கே.பாண்டியன் பதவியேற்றார். 2012ஆ-ம்ஆண்டு மே மாதம் முதலமைச்சர் நவீன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். அந்த நேரத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பியாரி மோகன் மகாபோத்ரா, பிஜு ஜனதா தளஆட்சியை கவிழ்க்க சதி செய்தார். இந்த சதியை பாண்டியன் வெற்றிகரமாக முறியடித்தார். அப் போதுமுதல் நவீனின் வலதுகர மானார்.
பாண்டியனின் ஆலோசனையின்படி ஒடிசாவில் பல்வேறு நலத் திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. இதன்காரணமாக ஒரு காலத்தில் உணவுதானிய தட்டுப்பாடு நிலவிய ஒடிசா, தற்போது தேசிய அளவிலான உணவு தானிய உற்பத்தியில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு அய்ஏஎஸ் பதவியிலிருந்து விலகி, முழுநேர அரசியலில் பாண் டியன் களமிறங்கினார்.

தற்போது ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் தேர்தல் நடைபெற்று வருகி றது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. 3-ஆவதுஅணியாக காங். களத்தில் இருக்கிறார்.
தற்போதைய தேர்தல் பிரச் சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் வி.கே. பாண்டியனை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒடிசாவில் வி.கே. பாண்டியனை குறிவைத்தே பிரச் சாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டி யன், மண்ணின் மைந்தர் கிடை யாது. ஒடிசாவை சேர்ந்தவரே மாநில அரசியலில் ஈடுபட வேண் டும் என்றுஎதிர்க்கட்சித் தலைவர் கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அனைத்து விமர்சனங் களையும் நேர்மறையாகக் கையா ளும் பாண்டியன், பிஜு ஜனதா தள ஆட்சியின் சாதனை பட்டி யல்களை மட்டும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

ஒடிசாவின் தலைசிறந்த அர சியல் தலைவர்களைவிட, ஒடியா மொழியில் அவர் தெளிவாக, அழ காக பேசுகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. குறிப் பாக பெண்கள், இளைஞர்கள் மத்தியில் அவர் செல்வாக்குமிக்க தலைவராக உள்ளார். இது பி.ஜே.பி. கூட்டணித் தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது.

கடந்த 2019ஆ-ம் ஆண்டு ஒடிசா மக்களவைத் தேர்தலில் மொத்த முள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம், 12, பாஜக 8, காங் கிரஸ் ஓரிடத்தில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் 117, பாஜக 10, காங் கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றும். நவீன் பட்நாயக் 6-ஆவது முறையாக முதலமைச்சராக பதவி யேற்பார் என்று வி.கே. பாண்டியன் உறுதி பட கூறி வருகிறார்.

முதலமைச்சர் நவீனுக்கு வாரிசு இல்லாத சூழலில் பாண்டியனே அவரது அரசியல் வாரிசாக கருதப் படுகிறார்.
அசைக்க முடியாத ஆலமரமாக ஒடிசா அரசியலில் ஓங்கி வளர்ந்த அவர் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளார்.

No comments:

Post a Comment