பாட்டியாலாவை தொடர்ந்து குருதாஸ்பூரிலும் மோடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

பாட்டியாலாவை தொடர்ந்து குருதாஸ்பூரிலும் மோடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சண்டிகர், மே 26 மோடி அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசா யிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு மேலாக டில்லி – அரியானா எல்லைப் பகுதியான ஷம்பூவில் போராடி வருகின் றனர். இந்த போராட்டம் 100ஆவது நாளை கடந்த நிலை யில், இதனையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா, குருதாஸ்பூர், ஜலந்தர் ஆகிய நகரங்களில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக கடந்த வாரம் விவசாயிகள் அறிவித்தனர். கடந்த 2022 ஜனவரி 5 அன்று பஞ்சாப் எல்லை யில் வந்த வழியிலேயே திருப்பியனுப் பப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறக் கூடாது என்பதால் 7,500 மத்தியப் படை களுடன் (தோராயமாக) பஞ்சாப் கிளம்பி னார் பிரதமர் மோடி.
23.5.2024 அன்று மாலை முதலே பஞ்சாப் மாநில எல்லை, பாட்டியாலா நகரின் எல்லை, சுங்கச்சாவடிகள், நகரின் உள் பகுதியில் என அனைத்து இடங் களிலும் விவசாயிகள் கருப்புக் கொடிக ளுடன் குவிந்தனர். ஆனால் பாட்டியா லா பகுதி முழுவதும் மத்தியப் படைக ளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டதால் விவசாயிகளால் பிர தமர் மோடிக்கு எதிராக போராட் டம் நடத்த முடியவில்லை.
பெண் விவசாயிகளும் கைது
இந்நிலையில், பாட்டியா லாவைப் போல குருதாஸ்பூரிலும் விவசாயிகளின் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. குரு தாஸ்பூர் நகர மைதானத்தை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயி கள் பேரணியாகச் சென்றனர். ஆனால் 10 கி.மீ. முன்னதாகவே தினாநகர் குதுப் வாரா என்ற இடத்தில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஊர்வலத் தில் இருந்த பெண் விவசாயிகள் உட்பட அனை வரையும் மத்தியப்படை காவல் துறையினர் கைது செய்தனர். விவசாயிகளின் மீதான அடக்கு முறைக்கு இடை யே பிரதமர் மோடி குருதாஸ்பூரில் சிறிது நேரம் பேசிச் சென்றார்.
பாஜக வேட்பாளர்களுக்கு சிக்கல்
பிரதமர் மோடிக்கெதிரான போராட் டத்தை மோடி அரசு மீண்டும் ஒடுக்கிய தால் பாஜக மீது விவசாயிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். மோடி சென்றால் என்ன, பாஜக வேட்பாளர்கள் தங்கள் பகுதிக்கு வந்து தானே ஆக வேண்டும். எப்படி வாக்கு கேட்கி றார்கள் என்று பார்க்கலாம் என விவசாயி கள் கூறியதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதனால் ஹரியானா போல பஞ்சாப் பிலும் பாஜக வேட்பாளர்கள் விரட்டப்படுவது உறுதி என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment