மேட்டூர் கழக மாவட்டத்தில் விடுதலை சந்தா திரட்டும் பணி
ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் (மேட்டூர் மாவட்டம்) ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ.சவுந்திரராசனிடம் சந்தா வழங்கியவர்கள்:
1.கஞ்சநாயக்கண்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாமி.இராசேந்திரன், 2. காடையாம்பட்டி பேரூர் தி.மு.கழக செயலாளர் இரா.பிரபாகரன். 3.காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திமுக கே.சி.இரவிச்சந்திரன், 4.காடையாம்பட்டி மேனாள் சேர்மேன் இராணிசேகர் அவர்களின் மகன், 5.ஓமலூர் வழக்குரைஞர் கார்த்திகேயன், 6. ஓமலூர் பத்மவாணி பெண்கள் கல்லூரி நிர்வாக அலுவலர் டாக்டர் பெ.முத்துகுமார், 7.ஊமகவுண்டம்பட்டி தி நியூ இண்டியா இன்சூரன்ஸ் கம்பெனி முகவர் பு.கனகராஜ், 8.காளிப்பட்டி செந்தில் சில்க்ஸ் உரிமையாளர் ப.செந்தில், 9.நச்சுவாயனூர் கோரைப் பாய் உற்பத்தியாளர் சோமு.வீரமணி, மேற்கண்ட தோழர்கள் அனைவரும் விடுதலை ஆண்டு சந்தா வழங்கியவர்கள், 10. தாராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி குருநாதன் அவர்களின் கணவர் குருநாதன் அரையாண்டு சந்தா ரூ.1000 வழங்கினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி விடுதலை சந்தா சேகரிப்பு விவரங்கள்: தருமபுரி ராவணன் புஷ்பநாதன் விடுதலை இரண்டு ஆண்டு சந்தா ரூபாய் 4000, தருமபுரி மாவட்ட மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவரும், தமிழர் தலைவர் மீது மாறாத பற்று கொண்டவருமான, ஆர் சின்னசாமி இரண்டு ஆண்டு விடுதலைச் சந்தா ரூபாய் 4000, மருத்துவர் பாரிக்குமார் விடுதலை சந்தா இரண்டு ஆண்டுக்கு ரூபாய் 4000, தருமபுரி அம்பேத்கர் அறக்கட்டளை பொறுப்பாளர் சு.அரிதாஸ் விடுதலை இரண்டு ஆண்டு சந்தா ரூபாய் 4000, தருமபுரி பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க தலைவர் கே .மணி விடுதலை ஆண்டு சந்தா ரூபாய் 2000, திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தருமபுரி, பொன்.மகேஸ்வரன், ரூபாய் 2000/- ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.
ஓராண்டு விடுதலை சந்தாவை திராவிட முன்னேற்றக் கழக மேனாள் பொருளாளர் (திருப்பத்தூர்) கோவிந்தராஜ் மாவட்ட கழக செயலாளர் பெ.கலைவாணனிடம் வழங்கினார்.
சிதம்பரம் மாவட்டத்தில்
விடுதலை சந்தா சேர்ப்பு
ற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சித் துணைத் தலைவர் முகம்மது யூனுஸ் ஆகியோரிடம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் ஆகியோர் சந்தா சேர்த்தனர். (25.5.2024)
காவேரிப்பட்டணம் ஒன்றிய பகுதிகளில் இல்லந்தோறும் தீவிர
விடுதலை சந்தா சேர்க்கைப் பணியில் மாவட்ட கழக நிர்வாகிகள்
கிருட்டினகிரி மாவட்டம் – கிருட்டினகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டணம், இராமாபுரம், பண்ணாந்தூர், அரசம்பட்டி, காந்திபுரம், கீழ்குப்பம் ஆகிய பகுதிகளில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் கழகத்தோழர்கள், ஆதரவாளர்கள் இல்லம் தோறும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர்கள் கிருட்டினகிரி த.மாது, காவேரிப்பட்டணம் பெ.செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.கிருட்டினன், மாவட்டச் செயலாளர் அ.வெங்கடாசலம், துணைத்தலைவர் மு.வேடியப்பன் ஆகியோர் தீவிர விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். 19.5.2024 அன்று காலை 8.00 மணிக்கு பண்ணந்தூரில் தொடங்கி இரவு 8.00 மணிக்கு கீழ்குப்பத்தில் நிறைவுப்பெற்ற விடுதலை சந்தா சேர்ப்புப் பணி. கொட்டும் மழையிலும் மேற்கண்ட அனைத்துப் பகுதியிலும் கழகத்தோழர்கள் இல்லம், ஆதரவாளர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று புரட்சிகரமான உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு “விடுதலை” நாளிதழின் அளப்பரிய பெரும் பணிகளை எடுத்துக் கூறி இல்லந்தோறும் “விடுதலை” சந்தாக்களை திரட்டினர்.
குறிப்பு:-
பண்ணந்தூரில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் கிருட்டினகிரி மாவட்ட மேனாள் தலைவர்கள் காவேரிப்பட்டணம் தா. திருப்பதி, மு.தியாகராசன் ஆகியோர் மீதும் பேரன்பு கொண்டவரும் முதுபெரும் பெரியார் பற்றாளருமான (94 – வயது) ஓய்வுபெற்ற பண்ணந்தூர் ஆசிரியர் பக்தவசலம் அய்யா அளவற்ற அன்பை தெரிவித்து அரையாண்டு விடுதலை சந்தாவை வழங்கினார்.
No comments:
Post a Comment