புதுச்சேரி முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சாரம் கழக இளைஞரணி - மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

புதுச்சேரி முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சாரம் கழக இளைஞரணி - மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

featured image

புதுச்சேரி, மே 25– புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் 19.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மாநில இளை ஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட இளைஞ ரணி செயலாளர் ச.சித்தார்த்தன் தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், மாவட்ட செயலாளர் கி. அறிவழகன் மாவட்ட காப்பாளர் இர.இராசு, மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்வின் தொடக்கமாக அனை வரையும் வரவேற்று திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் ப.இராகபிரியா அனைவரையும் வரவேற்றார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி சிறப்புரை ஆற்றினார் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

 

நிகழ்வில் பொதுக்குழு உறுப் பினர் லோ.பழனி பகுத்தறிவாளர் கழக மாநில துணை செயலாளர் எழுத்தாளர் இளவரசி சங்கர். விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் ஆ.சிவராசன், கழக பேச்சாளர் யாழ்.திலீபன், சு.கமேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், செய்தியாளர் பே. ஆதிநாராயணன், மகளிரணி வாசுகி பாலகிருஷ்ணன், களஞ்சியம் வெங்கடேசன் ஆகியோர் உரை யாற்றினர்.
இறுதியாக மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் ச.பிரபஞ்சன் நன்றி கூறினார்

கூட்டத்தில், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழுக்கு புதுச்சேரி மாவட்ட கழகத்துடன் இளைஞரணி – மாணவர் கழகம் இணைந்து அதிக அளவில் சந்தா வழங்குவது என வும், விடுதலை நாளிதழுக்கு வயது 90 வரும் ஜூன் 1 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும், சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா – குடிஅரசு நூற் றாண்டு விழா பிரச்சாரம் தொடர்ச் சியாக புதுச்சேரி மாவட்டம் முழுவதும் பரவலாக நடத்துவது எனவும், இளைஞரணி திராவிட மாணவர் கழக அமைப்பை புதுச் சேரி நகரம் ஒன்றியம் கிளை கழ கங்கள் முழுவதும் கட்டமைப்பை உருவாக்குவது எனவும், “புதிய கல்விக் கொள்கை அவசரக்கதியில் புதுச்சேரியில் நடைமுறைப் படுத் தப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது கழக இளைஞரணி மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.அரசு உடனடியாக கைவிட வேண்டும்” எனவும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

No comments:

Post a Comment