22.4.2024 நாள் அன்று ‘விடுதலை’ நாளிதழில் “சாமி கைவல்யம் நினைவு ஏந்தல்” கட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழு தியதை படித்தோம். மிக மிக மகிழ்ச்சி கொண்டோம். எங்கள் குடும் பத்தார் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள் கிறோம்.
உலகமே போற்றும் “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் அவர்கள் சாமிகைவல்யத்தின் கட்டுரைக்கு முன்னுரை எழுத தகுதியற்றவன் என்று எழுதியிருந்தார். அதை படிக்கும்போது,
“நிறைகுடம் தளும்பாது” என்ற உண்மையை கண்டறிந்தோம்.
இக்கட்டுரை இன்று வாழும் இளைய தலைமுறையினருக்கு வீர உணர்ச்சியை வழங்கும் அரும்பெரும் மருந்தாகும்.
எங்கள் தந்தை (உ.க.) அவர்களையும் எங்கள் சகோதரர் திவாகர் கைவல்யத்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டி எழுதியதன் மூலம் ‘விடுதலை’ நாளிதழ் வாச கர்கள் அனைவருக்கும் நாங்கள் அடையாளம் காட்டப்பட்டவர்களானோம்.
“பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதைப்போல்” காலச் சக்கரம் பல மைல்கள் கடந்து போனாலும் நீங்காத நினைவுகளுடன் ஆசிரியர் அவர்கள் நெஞ்சத்தில் அன்று கண்ட காட்சியை இன்று எங்களுக்கு எழுத்து வடிவமாக கொடுத்ததை படிக்கும்போது ஆனந்தக் கண்ணீருடன் நன்றியை கூறிக் கொள்கிறோம்.
ஈரோடு பயிற்சிப் பாசறையின் திராவிட மாணவராகிய ஆசிரியர் அவர்கள் அகவை 91 ஆகியும் ஈரோடு குருகுலத்து கொள்கையை நாடெங்கும் சுவாசிக்க செய்ய சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை கண்டு நாங்கள் வியப் படைகிறோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எங்கள் குடும்பத்தின்மீது கொண்டுள்ள பாசத் திற்கும், அன்பிற்கும் எங்கள் குடும்பத்தார்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாகவே இருப்போம்.
– தூ.க மனோகரன்
தூக்கநாயக்கன்பாளையம்
No comments:
Post a Comment