சென்னை, மே26- அனுமதியின்றி கருக்கலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பதிவு செய்யாத மருத்துவர்களை பணியில் ஈடுபடுத் தியதாகவும் கூறி சென்னை, கோடம் பாக்கத்தில் உள்ள ‘கெடன்ஸ்’ என்ற மருத்துவமனைக்கு மக்கள் நல் வாழ்வுத் துறை தடை விதித்துள் ளது. இதையடுத்து, அந்த மருத் துவமனை மூடப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சார் பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு:
சென்னை கோடம்பாக்கம் பகு தியில் உள்ள ‘கெடன்ஸ்’ என்ற தனியார் மருத்துவமனை ஒன்றில், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து வருவ தாக புகார் எழுந்தது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவர் களத்தூர் ரவிகிருஷ்ணா ஆகியோரி டமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மருத் துவர் இளங்கோ மகேஸ்வரன் அமைத்தார்.
அதன்படி, கடந்த 2-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில், அந்த மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை ஆவணங் கள் முறையாகப் பராமரிக்கப்பட வில்லை என்பதும், மருத்துவர் முரளி என்பவர் உரிய அனுமதி யின்றி ஸ்கேன் பரிசோதனை செய்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், மாதாந்திர அறிக்கை களை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், கர்ப்பிணிகளிடம் பெறக்கூடிய விண்ணப்பப் படிவம் (ஃபார்ம்-எஃப்) முறையாக பராம ரிக்கப்படாததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த மருத் துவமனை நிர்வாகம் அளித்த விளக்கக் கடிதம் ஏற்புடையதாக இல்லை.
இந்நிலையில், மீண்டும் அங்கு விசாரணைக் குழுவினர் கடந்த 23ஆம் தேதி ஆய்வு மேற் கொண்ட னர். அப்போது மருத்துவமனை யில் போதிய பணியாளர்கள் இல்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப் படுத்துதல்) சட்டம் 1997-இன் கீழ் உரிய அனுமதி பெறாமல் மருத்து வர்கள் பணியாற்றியதும் கண்டறி யப்பட்டது.
அது மட்டுமன்றி விதிகளுக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்வதும், மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை களை உரிய துறைசார் மருத்து வர்கள் இல்லாமல் மேற்கொண் டதும் தெரியவந்தது.
அதேபோன்று, அவசர சிகிச் சைகளுக்கான மயக்கவியல் நிபு ணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும், அனுமதி பெறாமல் மன நல சிகிச்சைகள் அளித்ததும் கண்டறியப்பட்டது.
ஜெனரேட்டர், உயிர் காக்கும் மின் அதிர்வு சாதனங்கள் (டிஃப்ரி லேட்டர்), வெண்டிலேட்டர் சாத னங்கள் ஆகியவை குறைபாடு களுடன் இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி, அந்த மருத்துவமனைக் கான பதிவுச் சான்றிதழை ரத்து செய்து அரசு ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதிமுதல் மருத்துவமனை மூடப்பட்டது.
Sunday, May 26, 2024
சட்டவிரோத கருக்கலைப்பு: தனியார் மருத்துவமனை மூடல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment