வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 24, 2024

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில்

featured image

சதுரங்க பயிற்சி மாணவர்களுக்கு‘‘பூமி சுழற்சி’’ ‘’நிலவு பெயர்ச்சி’’ அறிவியல் விளக்கக் கூட்டம்!

குடியாத்தம், மே 24 வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “பூமி சுழற்சி – நிலவு பெயர்ச்சி ” அறிவியல் விளக்க கூட்டம் 22.5.2024 அன்று மாலை 4 மணியளவில், குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில், நடைபெற்றது.
ஒரு மாதம் காலமாக நடைபெற்று வரும் மாணவர்களுக்கான சதுரங்கப் பயிற்சியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்காக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்நிகழ் வில், வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் முனைவர் வே.விநாயகமூர்த்தி தலைமை தாங் கினார். வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துனணச் செயலாளர் பி.தனபால் வரவேற்புரையாற்றினார், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறிஞர் க.சையத் அலீம் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி.சட கோபன் வேலூர் மாவட்ட கழக மகளிரணி தலைவர் எழுத்தாளர் ந.தேன்மொழி, கழக நகர அமைப் பாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழகம் ப.ஜீவானந்தம்,வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இர.ராஜகுமாரி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு அறி வியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெ.செந்தமிழ்ச்செல்வன் (தலைமை அமைப்பாளர், பூமி சுழற்சி & நிலவு பெயர்ச்சிப் பேரவை), அறிவியல் பரிணாம வளர்ச்சி குறித் தும் பூமியில் தோன்றிய முதல் உயி ரினம் தொடங்கி மனிதன் உருவானது வரை மாணவர்கள் தெளிவாக அறி யும்படி ஆவணப்படம் மூலம் திரையிட்டுக் காட்டினார்.
முன்னதாக சூரியனை மாண வர்கள் பிரத்தியேக கண்ணாடி மூலம் கண்டு களித்தனர். பூமி மற் றும் கோள்களின் சுழற்சியால் மனித சமுதாயத்திற்கும், இயற்கை அரண் களுக்கும் ஏற்படும் நன்மை தீமை குறித்தும் விளக்கி பேசினார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர் கள், மற்றும் நண்பர்கள் 130 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் குடியேற்றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment