ஊற்றங்கரை கல்லாவியில் "சுயமரியாதை இயக்கம்" - "குடிஅரசு" நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

ஊற்றங்கரை கல்லாவியில் "சுயமரியாதை இயக்கம்" - "குடிஅரசு" நூற்றாண்டு விழா

கல்லாவி, மே 11- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றி யம் கல்லாவியில் 6.5.2024 திங் களன்று மாலை 6 மணி அளவில் சுயமரியாதை இயக்கம் -குடிஅரசு இதழின் நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரை பொதுக்கூட்டம் ஊற்றங்கரை பகுதி சுயமரியா தைச் சுடரொளிகள் அ.பழனி யப்பன், கி.சிதம்பரம், தீ.பொன்னு சாமி, அரங்க. இரவி நினைவரங்க மேடையில் எழுச்சியுடன் சிறப் பாக பெற்றது.விழாவின் தொடக்கத்தில் கல்லாவி பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.விழாவில் பங்கேற்ற அனைவ ரையும் கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து. இராஜேசன் வரவேற்றுப் பேசினார்.நிகழ்ச்சிக்கு கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர்செ.பொன்முடி தலைமை வகித்துப் பேசினார்.நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மேனாள் நிர்வாகிகள் சித.அருள், இரு.கிருட்டிணன், இராம.சகா தேவன், சித.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ். ரஜினி செல்வம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் விவசாய அணி மாநில நிர்வாகி இரா.லெனின், காங்கிரஸ் வட்டார செயலாளர் நா.தனசெயன், நக ரத் தலைவர் விசிக இரா.சின்னத் தம்பி ஆகியோர் கலந்து கொண் டனர்.
கிருட்டினகிரி மாவட்ட கழ கத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்க உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் மா. செல்லதுரை, கிருட்டினகிரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகப் பொருளாளர் கா.ப.கதி ரவன், திமுக மாநில ஆதி திராவிடர் நலக் குழு துணைச் செயலாளரும் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வருமான சா.இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
அரூர் ச.இராஜேந்திரன் பேசுகையில், ஒரு ஏழைத் தொழி லாளியின் மகன் இன்றைக்கு மாவட்ட ஆட்சியராக தந்தை பெரியார் அவர்கள் செய்த புரட்சி தான் காரணம். அவர் தான் பட்டி தொட்டியெங்கும் சென்று அடிமைப்பட்டு கிடந்த இந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்டார். பெரியார் புரட் சிக்கு பிறகு ஏற்பட்ட முன்னேற் றங்கள் குறித்து விரிவாக பேசினார்.

கழக மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தகடூர்.தமிழ்ச்செல்வி பேசுகையில், தந்தை பெரியார் ஓர் ஆணாக இருந்து பெண்க ளுக்காக போராடினார். தந்தை பெரியார் தான் முதன்முதலில் அனைத்து துறைகளிலும் பெண் களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை களை முத்தமிழறிஞர் கலைஞர் அவருடைய ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பல்வேறு திட்டங் களை கொண்டுவந்தார். அதி லும் குறிப்பாக காவல் துறையி லும் பெண்களுக்கு பணி வழங்கப்பட்டது, சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அதை செய்து முடித்தவர் கலை ஞர் என பேசினார்.

கழக பேச்சாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை பேசுகை யில், சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது, எதற்காக தோன்றி யது என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக் கம் தோன்றிய பிறகு தான் பட்டியலினத்து பிள்ளைகளால் படிக்க முடிந்தது. சுயமரியாதை இயக்கம்தான் பெண்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும் என்று சொன்னது. சுயமரியாதை இயக்கம்தான் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட் டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை பெரியார் தான் இங்கு ஆட்சி செய்கிறார். பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு புகட்டியதால்தான் இன்று தமிழ்நாடு அறிவார்ந்த மாநிலமாக உள்ளது. வட நாட்டில் பாருங்கள் பாம்பு கடித்த இளைஞர் ஒருவரை கங்கை நதியில் நீராடினால் விசம் முறியும் என்று கங்கை நதியில் மூழ்க வைத்து இறந்து போனான். அங்கு ஓர் பெரியார் இல்லை ஆதலால் அவர்கள் மூடநம்பிக்கைகளை பின்பற்று கின்றனர். தமிழ்நாட்டில் யார் அரசியலுக்கு வந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் கொள் கைகளை ஏற்றுக் கொண்டு வந்தால் தான் இங்கு வெற்றி பெற முடியும் என்பதை தான் காட்டுகிறது.

எனவே, தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த சுயமரி யாதை இயக்கமும் மற்றும் அவர் நடத்திக் கொண்டிருந்த “குடி அரசு” இதழுக்கும் தான் நூற் றாண்டு விழா. இன்றைக்கு உல கின் ஒரே பகுத்தறிவு நாளேடாக விடுதலை என்ற நாளேடு வெளி வந்து கொண்டிருக்கின்றது. ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக் கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுகின்ற இயக்கம் திரா விடர் கழகம் என்பதை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பழ.வெங்கடாசலம் மந்திரமா? தந்திரமா? என்ற கலைநிகழ்ச் சியை செய்து காண்பித்து மந்திர வாதிகள் சாமியார் பித்தலாட் டங்களை எடுத்துக் கூறி அறிவியல் செயல் விளக்கத்தை கூறினார். விழாவின் இறுதியாக ஊற்றங்கரை ஒன்றிய செயலா ளர் செ.சிவராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட தொழி லாளரணி தலைவர் சி. வெங் கடாசலம், க.வெங்கடேசன், மு.வேடியப்பன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், மு.சிலம் பரசன், காரப்பட்டு ப.ரமேஷ், தருமபுரி இராமசந்திரன், கழக இளைஞரணி சி.ராஜபாண்டி, சி.தேவன், சி சுபாஷ் சந்திரபோஸ், கு.வினோத், மா இளையவேந்தன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த தமிழ் முரு கன், திருகலை , சுபாஷ் விசிக, மணி ராஜலிங்கம் திமுக அ ழகேசன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் சி. நாக ராஜ், ஆ தருமன், எம் கோவிந்தன், பாஞ்சாலராசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் துரை விஷ்ணு, முருகன், மாதேஷ், தங்கராஜ், பழனி, வெங்கடேசன், லட்சுமி கிருஷ்ணன்,ராமமூர்த்தி உள் பட திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment