28.5.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசை கவிழ்ப்பேன் என அமித்ஷா மிரட்டல் – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
* உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக் கையில் தமிழ்நாடு முன்னிலை – 49 சதவீதம் என ஒன்றிய அரசு அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராஜ்கோட் தீ விபத்து, மாநில அரசின் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை என குஜராத் நீதிமன்றம் கண்டனம்.
* மோடி மீண்டும் பிரதமராக ஆக மாட்டார். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு ஊழல் பற்றி மோடியிடம் அமலாக்கத் துறை கேள்வி கேட்கும். அப்போது மோடி, எனக்கு எதுவும் தெரியாது. கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப் பினார். கடவுள் செய்யச் சொன்னார். அதனால் செய்தேன் என்று கூறுவார் என தெரிகிறது என ராகுல் கிண்டல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடி, ‘முஜ்ரா, மங்கல்சூத்ரா பற்றி பேசுகிறார்… ஆனால் மேக் இன் இந்தியா குறித்து எதுவும் சொல்ல மாட்டார் – மல்லிகார்ஜூன கார்கே சாடல்.
* பாஜகவின் ‘400 இடங்கள்’பிரச்சாரம் எங்கள் தேர்தல் வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற் படுத்தியது. அரசியல் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள் என தாழ்த்தப்பட்டவர்கள் சந்தேகம் – மகாராட்டிராவின் ஓபிசி தலைவர் அமைச்சர் சகன் புஜ்பால் கவலை.
* “10 ஆண்டுகளில், ஒன்றியத்தில் உள்ள மோடி அரசு பெரும் பணக்காரர்களுக்காக மட்டுமே கொள்கைகளை வகுத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு (ளிறிஷி) வரும்போது, பணம் இல்லை என்று கூறுகிறது, ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு நிறைய பணம் இருக்கிறது, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.
* பிரச்சாரம் தொடங்கிய போது, போட்டி ஆளும் கட்சியான பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. அது முடிவடையும் வேளையில், வடக்கு பாஜகவை கலக்கம் அடையச் செய்யுமா என்பதே மய்யக் கேள்வியாக எழுந்துள்ளது என்கிறார் கட்டுரையாளர் சுகாஷ் பல்சிகார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய கூட்டணிக்கு ஆதரவாக பெரும் வாக்குப் பதிவு, பிரதமர் குழப்பம் மற்றும் சோர்வு: அகிலேஷ் கருத்து.
தி இந்து:
* பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என ராகுல் நம்பிக்கை
தி டெலிகிராப்:
* தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அளித்துள்ள உறுதிமொழிகள் ஊழல் நடவடிக்கை அல்ல – உச்ச நீதிமன்றம்.
* வாரணாசியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மய்யத்தை திறப்பதில் மோடி அரசின் அவசரம். ஏற்கெனவே மூன்று புற்றுநோய் மய்யங்களை கொண்ட வாரணாசியில் முன்மொழியப்பட்ட புற்றுநோய் மய்யத்தின் தேவை குறித்து மருத்துவர்கள் கேள்வி.
* திருவள்ளுவர் நாளை மாற்ற முயற்சிப்பதாக ஆளுநர் ரவி மீது திமுக குற்றச்சாட்டு!
– குடந்தை கருணா
No comments:
Post a Comment