மின் மாற்றிகளை…
தமிழ்நாட்டில் மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மின் மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தேர்ச்சி பெறத…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக மே 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தகவல்.
நடவடிக்கை…
சென்னையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை, கொலை முயற்சி, திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வாரத்தில் 42 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
தொழிலாளர் கல்வி
வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அன்று அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்களின்…
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அலைப்பேசி எண்: 94999 57575 அறிவிக்கப்பட்டுள்ளது.
முடியாது…
குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கடவுச் சீட்டு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment