நாள்தோறும் சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரலை' குருமூர்த்திகள் படிப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 11, 2024

நாள்தோறும் சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரலை' குருமூர்த்திகள் படிப்பது ஏன்?

கருஞ்சட்டை

கேள்வி: புத்துணர்ச்சி பெற நீங்கள் செய்வது என்ன?
பதில்: தினமும் படுக்கும்முன் காஞ்சி மஹா ஸ்வாமியின் ‘தெய்வத்தின்குரல்’ தொகுப்பி லிருந்து ஒரு பகுதியைப் படிப்பேன். அவ் வப்போது பொதுவாழ்வுப் பிரச்சினைகள் பற்றி, மகாத்மா காந்தியின் கருத்துகள், நாட்டுப் பற்றுள்ள தனி மனிதனின் ஒழுக் கம்பற்றிய ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் கோல்வால்கரின் சிந்தனைகளைப் படிப் பேன்.
(‘துக்ளக்’, 24.4.2024, பக்கம் 30)
கேள்வி: மஹாபெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ படித்துவரும் நான், என்னைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பு கிறேன். என்ன சொல்வீர்கள்?
பதில்: தெய்வத்தின் குரலைப் படிப்பதோடு நிறுத்தாமல், அதில் பெரியவர் கூறிய ஏதா வது ஒன்றைச் செய்யத் தொடங்கினால், உதாரணமாக பிரதிபலன் இல்லாத சேவை – அதுவே நாம் மேம்படுவதற்கு வழி. இது என் அனுபவம்.
(‘துக்ளக்’, 15.5.2024, பக்கம் 11)

நமது பதிலடி!

‘‘தீண்டாமை க்ஷேமகரமானது” என்று கூறும் – மனித குல விரோதி சங்கராச்சாரியார்.
ஸநாதனம் என்பது வருணாசிரமமே என்று குருமூர்த்தி அய்யர்வாள் கூறும் அதே, ‘தெய்வத்தின் குரலில்’தான் அதே சங்கராச்சாரியார் அருளி இருக் கிறார் (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம், பக்கம் 159).
அதே ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் பக்கம் 162 இலும், 282 லும் இவ்வாறு கூறுகிறார்:
‘‘யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வருணதர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிற்பாடுதான் இப்படி மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது” என்கிறார் குருமூர்த்தி அய்யர்வாள் தூங்குவதற்கு முன்னாலும், பின்னாலும் துதிக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி! பக்கம் 282-லும் ஸநாதனம் என்று எழுதி அடைப்புக் குறிக்குள் அதுவே (வருணதர்மம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குருமூர்த்தி அய்யர்வாள்கள், சங்கராச்சாரியாரை எந்த இடத்திலும் சந்தேகம் இல்லாமல் சந்தோஷமாகத் தூக்கிப் பிடிப்பதன் சூட்சுமம் இப்பொழுது தெரிந் திருக்கவேண்டுமே!

ஸநாதன தர்மம்பற்றிப் பேச்சை எடுத்தால், சலங்கை கட்டிக் குதிக்கும் இந்த அம்மாஞ்சிகள் – ஏதேதோ காரணங்களைக் கற்பித்துக் கதைக்கிறார்களே – அதன் உண்மைத் தன்மை என்ன என்பது இப்பொழுது தெரிந் திருக்கவேண்டுமே! ஸநாதனம் என்பது வருணாசிரம தர்மம்தான் என்று தூங்குவதற்கு முன்பும், தூங்கி விழித்த பின்னும் படிக்கிறார்களே – அவர்களின் மஹா பெரியவாளின் ‘தெய்வத்தின் குரல்’ அது இதைத்தான் குறிப்பிடுகிறது.

‘‘அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்று உண்டான பிராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.” (மனுதர்மம், அத்தியாயம் 11, சுலோகம் 87).
இந்த வருணதர்மமும், ஸநாதனமும் ஒன்று என்று ‘தெய்வத்தின் குரலில்’ (பாகம் 1, பக்கம் 162, மற்றும் 282) குறிப்பிடுகிறார். இந்தத் தெய்வத்தின் குரலிலிருந்துதான் ஒவ்வொரு நாளும் குருமூர்த்திகள் ஏதாவது குறைந்தபட்சம் ஒரு பக்கத்தையாவது படிக்கிறார்கள்.
அரசியல் என்றால், வானத்தை வில்லாக வளைத் தும், மணலைக் கயிறாகத் திரித்தும் பேசும் இந்தத் ‘துக்ளக்’ குருமூர்த்திகள் கூட்டம், சங்கராச்சாரியார் மற்றும் பார்ப்பன சமாச்சாரங்கள் என்றால், அப்படியே பம்முவதைப்பார்த்தேளா?

No comments:

Post a Comment