ஜான்சி, மே 29 உ.பி. மாநிலம் ஜான்சியில் 48.1°C (118.5°F) வெப்பம் பதிவானது இது 132 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்சியை அடுத்து ஆக்ரா-வில் 47.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது, இது 26 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பமாகும் இதற்கு முன் 1998 மே 27 அன்று அதிகபட்சமாக 48.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 45 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவான நிலையில் இங்கு இரவு நேர வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக உ.பி. மாநிலத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசியாபாத், கௌதம் புத் நகர், அலிகார், மதுரா, ஹத்ராஸ், ஆக்ரா, ஃபிரோசாபாத், எட்டாவா, அவுரையா, ஜலான், ஜான்சி, லலித்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வெப்ப அலைக்கு வாய்ப்புகள் உள்ளதால் இங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர் வெளியேறி வெப்ப வாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதை அடுத்து மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க அறிவுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment