டிஜிட்டல் பொருளாதாரம் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

டிஜிட்டல் பொருளாதாரம் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

featured image

புதுடில்லி, மே 25 டிஜிட் டல் பொருளாதாரம் 6 கோடி வேலைகளை உருவாக்கியது பற்றி பிரதமர் விளக்கம் தர வேண்டும் என்று காங் கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி யுள்ளார்.

பிரபல தனியார் நாளி தழுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளா தாரம் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என கூறியிருந்தார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம் பரம், (நிதிஙீ மிழி) இது தொடர்பான தரவுகளை பொதுவெளியில் பிரதமர் வெளியிடுவாரா என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2024 வரை என்ன நடந்தது? என்றும், 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என் றார், மொத்த வேலை வாய்ப்புகளின் எண் ணிக்கை என்ன? என்றும் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.

படித்த இளைஞர் களின் வேலையின்மை விகிதம் ஏன் 42 சதவிகி தமாக இருக்கிறது என் றும், டிஜிட்டல் பொரு ளாதாரம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வில்லையா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2024-ஆம் ஆண்டு அய்அய் டியில் இருந்து வெளிவந்த 38 சதவிகித பட்ட தாரிகளுக்கு ஏன் இன் னும் வேலை கிடைக்கா மல் உள்ளது என்றும், டிஜிட்டல் பொருளா தாரத்தால் அய்அய்டி பட்டதாரிகள் புறக்கணிக் கப்படு கிறார்களா? என் றும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment