6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு

புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மேற்குவங் கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அரியானா, ஆகிய மாநிலங்களிலும், டில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 58 தொகுதிகளில் பெருமளவு அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்தது.
காலை 7 மணி முதல் பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, டில்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜன நாயக கடமை ஆற்றினார். டில்லி யில் உள்ள வாக்குச்சாவடி மய்யத் திற்கு தனது மனைவி சுதேஷ் தன் கருடன் சென்ற ஜெகதீப் தன்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டில்லி யில் உள்ள வாக்குச்சாவடி மய்யத் தில் வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை யொட்டி புவனேஷ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒடிசா முதல மைச்சர் நவீன் பட்நாயக் தனது வாக்கினை பதிவு செய்தார். இதே போல், பிஜு ஜனதா தளம் கட்சி யின் நிர்வாகி வி.கே.பாண்டியன், புவனேஷ்வரில் உள்ள வாக்குச் சாவடி மய்யத்தில் வாக்களித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் மேனாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாக்களித்தார். அவரது வருகையால் வாக்குச்சாவடி மய் யமே திக்குமுக்காடியது.
இந்திய கிரிக்கெட் அணியின் மேனாள் கேப்டனான கபில் தேவ் டில்லியில் வாக்களித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர், ஜனநாயக நாடாக இந்தியா இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment