சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேவை அதிகரிப்பு மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் நீர் வினியோகம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏரிகளில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாகவே வறண்டு கிடக்கிறது. பூண்டி ஏரியில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் நீர் சேமிக்கமுடியாத நிலையும் இருந்து வருகிறது.
இதுதவிர புழல் ஏரியில் 2 ஆயிரத்து 914 மில்லியன் கன அடி (2.9 டி.எம்.சி.), செம்பரம்பாக்கத்தில் 1,842 மில்லியன் கன அடி (1.8டி.எம்.சி.) இருப்பு உள்ளது.சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சொற்ப அளவிலேயே குடிநீர் இருக்கிறது. தற்போதைய நிலையில் ஏரிகளில் 5 ஆயிரத்து 556 மில்லியன் கன அடி (5.5 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7 ஆயிரத்து 271 மில்லியன் கன அடி (7.2டி.எம்.சி.) இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரியில் இருக்கும் நீர் மூலம் அடுத்த 5 மாதத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment