மயிலாடுதுறை, மே 24- நாகை மாவட்டத்தில் “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத் தின் கீழ் 1.465 நபர்களுக்கு ரூ.98 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட் டால் அவர்களை அவசர சிகிச்சை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளித்து உயிர் காக்க வேண்டும் என்பதற்காக “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் விபத்து நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான திட்டத்தை அறிமுகம் செய்து இதற்காக ரூ.2 லட்சம் வரை அரசு செலவு செய்வதாக திராவிட மாடல் அரசு அறிவித்தது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றிட நல்ல பல திட்டங்களை நாள்தோறும் வகுக்கப்படுகிறது.
இதன்படி 2021ஆம் ஆண்டு முதல மைச்சராக பொறுப்பேற்ற நாளில் முத்தான 5 திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதில் கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றிட தனித் துறை ஆகியவை ஆகும். உலகமே அஞ்சிய கோவிட் -19 போன்ற பெரும் தொற்று, இயற்கை பேரிடர்களான அதீத கனமழை, இயற்கை சீற்றம் போன்ற காலங்களில் மக்களோடு மக்களாக நின்று எந்நேரமும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தனைக் கொண்டு அம்மக்களை ஏற்றம் பெற செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். இவ்வாறு எண்ணற்ற திட்டங்களில் “இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப் பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப் புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர் காக்கும் உன்னத திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகில் உள்ள 683 மருத்துவ மனைகளில் ரூ.213.47 கோடி செலவில் 2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை தமிழ்நாட்டில் வழங்கப் பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் வாயிலாக 1, 465 நபர் களுக்கு ரூ.98 லட்சத்து 72 ஆயிரத்து 725 மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment