மோடி அரசின் சா (வே)தனை அய்அய்டியில் படித்த மாணவர்களுக்கும் வேலை இல்லை வீட்டில் முடங்கிக் கிடக்கும் 38% பட்டதாரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 25, 2024

மோடி அரசின் சா (வே)தனை அய்அய்டியில் படித்த மாணவர்களுக்கும் வேலை இல்லை வீட்டில் முடங்கிக் கிடக்கும் 38% பட்டதாரிகள்

featured image

புதுடில்லி, மே 25 நரேந்திர மோடி 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில்,”நான் பிரதமர் ஆனால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்” என கூறி பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் எதையும் மோடி அரசு வழங்காமல் ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளை காவு வாங்கியுள் ளது. இதனால் நாட்டில் வேலையின்மை பெரும் உச்சத்தில் உள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ராமர் கோவில் இறுதிக் கட்டுமான வேலை, ஞானவாபி மசூதியில் இந்து கோவில் சின்னங்கள் இருக்கிறதா? என் பதை பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான அய்அய்டி நிறுவனங்களில் பொறியியல் படித்த 38% பட்டதாரிகளுக்கு வேலையில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அய்அய்டி கான்பூர் மேனாள் மாணவரான தீரஜ் சிங் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஅய் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் வெளியான தகவலில், “நாட்டிலுள்ள 23 அய்அய்டிகளில் பயின்ற சுமார் 38% மாணவர்கள் இந்த ஆண்டு இதுவரை உரிய பணியில் அமர்த்தப்படவில்லை. குறிப்பாக 23 அய்அய்டிகளின் 7,000-க்கும் மேற் பட்ட மாணவர்கள் வளாகத் தேர் வில் கூட சேர்க்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளாகத் தேர்வில்
இடம்பெறாத மாணவர்களின் எண் ணிக்கை 3,400 ஆக இருந்தது. தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

அய்அய்டி நிறுவனங்களில் படித் தாலே உள்நாட்டின் முக்கிய நிறுவ னங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் எளிதாக வேலைக்கு அமரலாம் என்ற எண்ணத்துடன் பெரிய அளவில் தொகை செலவழித்து நுழைவுத் தேர் வுடன் சேருகிறார்கள். அதனால் நாட் டில் அய்அய்டி நிறுவனங்களுக்கு தனி மரியாதை உள்ளது. ஆனால் மோடி அர சின் தவறான கொள்கையால் அய்அய்டி நிறுவனங்களில் கூட பொறியியல் படிப்பை முடித்தவர்களு ககும் பணி கிடைக்காத சூழல் நிலவி வருவது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

No comments:

Post a Comment