சிறீநகர், மே 29- கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீரில் அதிக பேர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (27.5.2024) தெரிவித்தது. 2019 -ஆம் ஆண்டு தேர்த லுடன் ஒப்பிடுகையில் வாக்க ளித்தவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: அய்ந்து மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 58.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 2019-இல் இது 19.16 சதவீதமாக இருந்தது. 2024-இல் இது 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
மூன்று மக்களவைத் தொகுதிகளில் 50.86 சதவீதம் வாக்குகள் பதிவானது ஜனநாயக செயல்பாட்டின் மீது காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
சிறீநகரில் 38.49 சதவீதமும், பாரமுல்லாவில் 59.10 சதவீதமும், அனந்த்நாக்-ரஜொரி தொகுதியில் 54.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மீதமுள்ள இரு தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் 68.27 சதவீதம் மற்றும் 72.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
No comments:
Post a Comment