மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 29- பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகை யான துணை மருத்துவப் படிப் புகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்க ளும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. இந்நிலையில், அந்த இடங்களுக்கான 2024-2025ஆ-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும்‹ www.tnmedicalselection.or ஆகிய இணைய தளங்களில் விண் ணப்பிக்கும் நடைமுறை கடந்த கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 21ஆ-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment