மிசாரம், மே 29 மிசோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.கன மழையால் அய்சால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று (28.5.2024) காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 13 போ் உயிரிழந்தனா். இது தவிர பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 22-ஆக அதிகரித்தது. கன மழை தொடா்வதால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடலில் உருவான ‘ரீமெல்’ புயல் வங்கதேசத்தின் கோப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் மிசோரம் மாநிலத்தில் தொடா்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள அய்சால் மாவட்டத்தின் மெல்தம் மற்றும் லிமென் ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள கல்குவாரியில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி நான்கு வயது சிறுவன், ஆறு வயது சிறுமி உள்பட 13 போ் உயிரிழந்தனா். அவா்க ளின் உடல்களை காவல்து றையினா் மீட்டனா்.
கல்குவாரியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பலா் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் 2 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்து றையினா் தெரிவித்தனா்.கல்குவாரி விபத்து உள்பட கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அறிவித்தார்.
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 8 மிசோ பழங்குடியின மக்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.2 லட்சத்தை அவா் வழங்கினார். மீதமுள்ள ரூ.2 லட்சம் நிதி விரைவில் வழங்கப்படும் எனவும் அவா் தெரிவித்தார். கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார். இந்த விபத்து தொடா்பாக அந்த மாநில உள்துறை அமைச்சா் கே.சப்தங்கா கூறுகையில், ‘விபத்தில் உயிரிழந்த பழங்குடியின அல்லாத நபா்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவா்கள் மிசோரம் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்போரின் பட்டியலில் இருந்தால் அவா்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும்.அவா்கள் பணிக்காக இங்கு வந்திருந்தால் நிவாரண நிதி வழங்கப்படாது’ என்றார்.
No comments:
Post a Comment