தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 28, 2024

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம்!

சென்னை, மே 28- தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயி ரத்து 725 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் ஜூன் மாதம் முதல், அரசு பள்ளி சத்துணவு மய்யத்திலிருந்து மதிய உணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதிய உணவை உரிய நேரத்தில், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவும், சிறப்பு பள்ளி பயனாளிக ளுக்கு உணவை முறையாக வழங்கிடவும் பொறுப்பாளர்களை நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பள்ளி மாணாக்கர்கள் மதிய உணவினை உட்கொள்ளத் தேவை யான தட்டு, டம்ளர் ஏற்பாடு செய்திடவும், மதிய உணவை சூடாக, பாதுகாப்பாக கொண்டு சென்று வழங்குவதற்கான கொள்கலன் மற்றும் உபகரணங்களை ஏற்பாடு செய்திடவும் மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம் தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment