விண்ணப்பித்த 16 நாட்களில் பட்டா - அரசு புதிய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

விண்ணப்பித்த 16 நாட்களில் பட்டா - அரசு புதிய உத்தரவு

சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ஆன் லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக் கும் நபர்கள் இனி 16 நாட்க ளுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் மற்றும் சான்றுகள் பெறுவதற்கு மாநி லம் முழுவதும் உள்ள நடை முறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலு வலர்களை நியமிக்க தமிழ் நாடு அரசு முடிவு எடுத்துள் ளது. மேலும், தாலுகா வாரி யாக துணை ஆட்சியர் நிலை யில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும் அரசு திட்டமிட் டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவுக் கும், ஒரு சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும். முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக் கும் வகையில், வெளி தாலுகாவை சேர்ந்த அதிகாரி களை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒவ்வொரு தாலுகாவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க, அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

 

No comments:

Post a Comment