சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 29, 2024

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

featured image

சென்னை, மே 29- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்தவர் விவசாயி வேலு (35). மே 22-ஆம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக மே 23-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர், மே 24-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க உறவினர்கள் முன் வந் ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் அவரது உறுப்புகளைப் பெற்றனர்.

இதயம், 2 நுரையீரல் சென்னை எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், இரு கண்கள் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும், ஒரு சிறு நீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயா ளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டன.

குறிப்பாக, 40 வயது பெண் ணுக்கு கொடையாக பெறப்பட்ட கல்லீரலை பொருத்தியதன் மூலம் 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

மருத்துவமனை தலைவர் தேரணிராஜன் அறிவுறுத்தலின் படி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் சுகுமார், மருத்துவர் பிரபாகரன், கல்லீரல் மருத்துவத் துறை இயக்குநர் கே.பிரேம்குமார், மயக்க மருத்துவர்கள் வெங்கடேஷ், கண்ணன், பிரித்விகா, பிரபு, தமிழ் செல்வன் உள்ளிட்ட மருத்து வர்கள் மற்றும் ரேலா மருத்துவ மனை மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கல்லீரல் மருத்துவத் துறை இயக்குநர் கே.பிரேம் குமார் கூறுகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனையில் இது வரை 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனி யார் மருத்துவ மனையில் ரூ. 35 லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல மைச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டண மின்றி மேற்கொள்ளப்பட்டுள் ளது என்றார்.

ஃபிபுலா எலும்புகள் கொடை

மூளைச் சாவு அடைந்த வேலு விடம் இருந்து 2 கால்களில் (முட்டிக்கும், கணுக்காலுக்கும் இடையில்) உள்ள ஃபிபுலா எலும்பு கொடையாக பெறப்பட்டு தேவையானவர்களுக்கு பயன் படுத்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எலும்பு முறிவு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் பா.பசு பதி கூறுகையில், எலும்பு உடைதல், எலும்பில் புற்றுநோய் கட்டி ஏற்படு தல், எலும்பில் தொற்று பாதிப்பு உட்பட எங்கு எலும்பு இழப்பு ஏற்பட்டாலும், அதற்கு மாற்றாக ஃபிபுலா எலும்பை பயன்படுத்த முடியும். இதுவரை 6 பேரிடம் இருந்து ஃபிபுலா எலும்பு கொடை யாக பெறப்பட்டு, 12 பேருக்கு பயன் படுத்தப்பட்டது. தற்போது, 7ஆவது நபரிடம் இருந்து கொடை யாகப் பெறப்பட்டுள்ள ஃபிபுலா எலும்பு தேவையானவர்களுக்கு பொருத்தப்படும் என்றார் அவர்.

சிறுநீரக மாற்று சிகிச்சை

இந்த மருத்துவமனையில் இது வரை1,600-க்கும் மேற்பட்ட சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. நிகழாண்டில் 26 சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைகள் நடந்துள்ளன.

No comments:

Post a Comment