11. மாணிக்கவாசகர் பற்றிய கூற்றில் தவறானதை காண்க:
a) இவர் திருநாவலூர் என்ற ஊரை சேர்ந்தவர்
b) இவரை ஆதரித்தவர் அரிமர்த்தன பாண்டியன் ஆவார்.
c) சைவ சமய குரவர்களுள் இவரும் ஒருவர் ஆகும்.
d) திருவாசகத்தை எழுதியவர் இவரே.
12. திருமூலர் பற்றி சரியான இணை காண்க:
1.இவர் ஒரு சித்தர் ஆவார்
2. இவர் திருவாவடுதுறையில் பிறந்தார்
3. திருமந்திரம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
a) 1, 2 சரி b) 1. 3 சரி
c) 2, 3 சரி d) 1, 2, 3 சரி
13. குலசேகர ஆழ்வார் பற்றிய தவறான கூற்றை காண்க
a) இவர் கேரளாவில் உள்ள திருவஞ்சைகளத்தில்
பிறந்தார்.
b) இவரின் அம்சம் கவுத்துவ மணி அம்சம்
c) கொல்லி காவலன், கூடல் நாயகன் என்பது இவரது
சிறப்புப் பெயராகும்.
d) மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த பகுதி (இடம்)
திருவேங்கடம் ஆகும்.
14. ஆண்டாள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. இவரின் அம்சம் பூமகள் அம்சம் ஆகும்.
2. இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார்.
3. இறைவனுக்கு மனைவியானதால் நாச்சியார் என்று
அழைக்கப்படுபவர்.
4. இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம்
நடந்த இடம் திருவரங்கம்.
a) 1. 2. 3. 4 சரி b) 1, 2, 3 சரி
c) 1. 2 சரி d) 2, 3, 4 சரி
15. சீத்தலைச் சாத்தனார் பற்றி தவறானதை காண்க:
a) இவரின் இயற்பெயர் சாத்தனார் ஆகும்.
b) இவர் இயற்றிய நூலே மணிமேகலை ஆகும்.
c) ஆபுத்திரன் நாடு அடைந்த காதை 23ஆவது
காதை ஆகும்.
d) மணிமேகலையின் தோழி சுதமதியாகும்.
16. சீத்தலைச்சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன்,
நன்னூற் புலவன் என்று பாராட்டியவர் யார்?
a) திருத்தக்கத்தேவர் b) இளங்கோவடிகள்
c) திரு.வி.க. d) பவனந்தி முனிவர்
17. எச்.ஏ. கிருட்டிணனார் பற்றிய சரியான கூற்றைக்
காண்க:
1. இவர் கிறித்துவ கம்பர் என்று அறியப்படுகிறார்.
2. இரட்சணிய யாத்திரீகம் என்னும் நூலை
எழுதியுள்ளார்.
3. இரட்சணிய யாத்திரிகம் கிறிஸ்துவர்களின் தேவாரம்
என அழைக்கப்படுகிறது.
a) 1, 2 சரி b) 1, 3 சரி
c) 2. 3 சரி d) 1. 2. 3 சரி
18. பொருத்துக
பாடியவர்கள்நூல்கள்
a) அப்பர் – 1. 384 பதிகங்கள்
b) சம்பந்தர் – 2. திருக்குறுந்தொகை
c)சுந்தரர் – 3. திருக்கோவை
d) மாணிக்கவாசகர் – 4. திருத்தொண்டர் தொகை
a b c d
a) 2 1 3 4
b) 1 2 3 4
c) 4 3 2 1
d) 2 1 4 3
19. சரியான இணை காண்க:
1. சுந்தரர் – சக மார்க்கம்
2. சம்பந்தர் – தாச மார்க்கம்
3.அப்பர் – சத்புத்திர மார்க்கம்
a) 1 ஆவது இணை b) 2 ஆவது இணை
c) 3 ஆவது இணை d) எதுவுமில்லை.
20. தவறானதை காண்க:
a) ‘இருளகற்றிய கதிரவன் கதிரென விதழிற்’ என்ற
பாடல் பெரியபுராணத்தில் உள்ளது.
b) “அறம் எனப் படுவது யாதெனக் கேட்பன்” என்ற
பாடல் சிலப்பதிகாரத்தில் உள்ளது.
c) “தோடுடைய செவியோன்” என்ற பாடலைச்
சம்பந்தர் பாடினார்.
d) ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’
என்ற பாடலை திருநாவுக்கரசர் பாடினார்.
விடைகள்:
11.a. 12.b. 13.d. 14.a. 15.c. 16.b. 17.a. 18.d. 19.a. 20.b
– தொடரும்
No comments:
Post a Comment