மோடி அரசின் 10 ஆண்டு கால செயல்பாடுகளால் வாழ்விழந்த மக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 26, 2024

மோடி அரசின் 10 ஆண்டு கால செயல்பாடுகளால் வாழ்விழந்த மக்கள்!

மோடி அரசை அம்பலப்படுத்தி
கிராமங்கள் தோறும் பிரச்சாரம் –
விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை, மே 26- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலை வரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்ன துரை, மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்த லிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட் டறிக்கை வருமாறு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் அவ்வப்போது சிறிது உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒன்றிய பாஜக அரசு தற்பொழுது, தேர்தலை மனதில் வைத்து, மாநிலங்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ. 319 தினக்கூலி அறிவிக் கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வேலைத் திட்டத்திற்கான தினக் கூலியையும், வேலை நாள்களையும் உயர்த்திட வேண்டும் என்று ஊரக வேலை திட்டத்திற்கான பொருளாதார அறிஞர்கள் குழு பரிந்துரைத்த போது, ஒன்றிய பாஜக அரசு, அந்தப் பரிந் துரைகளை கிடப்பில் போட்டுவிட்டது. தற் பொழுது தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக ஊரக வேலைத் திட்டக் கூலி விகிதங்களை அறிவித்துள்ள ‘ஏழைகள் விரோத’ மோடி அரசை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி அரசின் கொள்கைகளாலும், பல்லா யிரக்கணக்கான சிறு-குறு தொழில்கள் மூடப் பட்டுள்ளதாலும் கிராமப்புறங்களில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள், சிறு-குறு விவசாயிகள் தமிழ் நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையையும், வருமானத்தையும் இழந்துள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மோடி அரசு, தாறுமாறாக போட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பால் அனைத்து அத்தியாவசிய பண்டங் களும் மிக மிகக் கடுமையான விலை உயர்ந்து, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புற ஏழைகளை நேரடியாகக் கழுத்தை நெரிக்கிறது.
மோடி அரசின் 10 ஆண்டு கால செயல்பாடு களால் வாழ்விழந்த மக்கள் வாழ்க்கையை நடத் திட கந்துவட்டி கொடும் கும்பலிடம் சிக்கிக் கிடக் கின்றனர். ஆகவே, மோடி அரசால் ஏற்பட்டுள்ள வேலையின்மை- உயர்த்தப்பட்டுள்ள விலை வாசி உயர்வு ஆகிய காரணங்களால் பாதிக் கப்பட்டுள்ள கிராமப்புற ஏழைகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும், வேலை நாள்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இதுதான் இப் போதைய உடனடித் தேவை என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
மோடி அரசு இந்த அடிப்படையில் வேலை- கூலி விகிதத்தை உயர்த்தி அறிவிக்காவிட்டால் கிராமங்கள் தோறும் மோடி அரசை அனைத்து வகையிலும் அம்பலப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment