பாட்னா, ஏப்.3 தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்துவருவதாக கூறி பீகார் மாநிலம் முசா ப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரசில் இணைந்துள்ளார்.
தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஜய் குமார் நிஷாத் பாஜக வில் இருந்து 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இவர் ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படையாகவே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டித்துப் பேசியுள்ளார்.
மேலும் நிதிஷ்குமாரோடு கூட்டணி மீண்டும் அமைத்ததை விமர்சித்திருந்தது பேசு பொருளாக இருந்தது. சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரே தனது கட்சியின் செயல்பாட்டை விமர்சித்தது குறித்து பாஜக தலைவர்கள் கோபத்தில் இருந்தனர். இதனால் இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட அஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
இதனைஅடுத்துஅஜய் பா.ஜ.க.வில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்துள்ளார்.
பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பீகாரின் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் மோகன் பிரகாஷ்,
கிஷன்கஞ்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். முகமது ஜாவித் மற்றும் காங்கிரசின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா முன்னிலையில் அவர், காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது அஜய் செய்தியாளர்களிடம், ”தூக்கில் போடப்படும் நபருக்குக் கூட கடைசி ஆசை என்னவென கேட்கப்படும். ஆனால், எனக்கு சீட் கிடையாது என முடிவானதற்கு முன் ஒரு முறை கூட அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. நான் மக்களுக்காக குரல் கொடுப்பவன். தவறு என்றால் எனது கட்சியே ஆனாலும் கேள்வி கேட்பேன். அதற்கானஎனக்கு சீட் தரவில்லை என்றால் நகைப்பாக உள்ளது. என்னைச் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் தலைமைக்கு நன்றி, இம்முறை பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல் மக்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment