விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. தோழர் புகழேந்தி மறைந்தாரே! கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. தோழர் புகழேந்தி மறைந்தாரே! கழகத் தலைவர் இரங்கல்

11-8

விக்ரவாண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் புகழேந்தி அவர்கள் (வயது 71) உடல் நலக் குறைவு ஏற்பட்டு, திடீரென்று இன்று (6.4.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
அருமை சகோதரர் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழமையுடன் இருந்து, இயக்கத்தின் கட்டுப்பாடும், கடமை உணர்வும் கொண்ட கொள்கைப்பூர்வமான கண்ணியம் மிக்கவராக வாழ்ந்தவர். எவரிடமும் நட்புரிமையுடனும், பண்புடனும் பழகுபவர்.
நம்மிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்தவர்.
அவருடைய திடீர் மறைவு அப்பகுதி மக்களுக்கும், திராவிடர் இயக்கத் தோழர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப் பெரிய ஈடு செய்ய இயலாத பெருத்த நட்டமாகும்.
அவரது மறைவினால் வருந்தி வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.விற்கும் மற்றும் அத்தொகுதி மக்களுக்கும் நமது ஆறுதல்; மறைந்த அந்த தொண்டறத் தோழருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
6.4.2024

No comments:

Post a Comment