கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - வீர வணக்கம்

featured image

கேரள மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான யு.கலாநாதன் (வயது 84) மலப்புரம் மாவட் டம் வல்லிக் குன்னத்தில் நேற்று (6.3.2024) இரவு மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல மாநாடு களிலும், கூட்டங்களிலும் பங்கேற்றவர். எம்முடனும், பெரியார் இயக்கத் தோழர்களுடனும் அன்புடன் பழகியவர். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற் றியவராவார். கேரள யுக்திவாதி சங்க மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களையும் என்னையும் அழைத்து பங்கேற்கச் செய்தவர்.

அரசியலிலிருந்து மதத்தை முழுமையாகப் பிரித்திட வேண்டும் என்பதை கொள்கைப் பிரச் சாரமாக, இயக்கமாகக் கட்டியமைக்கப் பாடுபட்டவர். இதுகுறித்து டில்லியில் – ஜந்தர் மந்தரில் அவர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
வயது முதுமை சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக, சில ஆண்டுகளாக வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வந்த நிலையிலும், இறுதி வரை பகுத்தறிவாளராக, மனிதநேயக் கொள்கைக் காகவே வாழ்ந்த பெருமகனார் ஆவார். கலாநாதன் அவர்களின் மறைவு இந்திய பகுத்தறிவாளர் இயக்கத்திற்கு பேரிழப்பு.
கலாநாதன் அவர்களை, மனைவி திருமதி ஷோபனா, மகன் சமீர் ஆகியோர் இறுதிவரை கவனித்து வந்தனர். உடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பது பாராட்டத்தகுந்தது.
மறைவுற்ற யு.கலாநாதன் அவர்களுக்கு பகுத் தறிவாளர் கழகம் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரது மறைவிற்கு குடும்பத்தாருக்கும், கேரள யுக்திவாதி சங்கத்தாருக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

வாழ்க பகுத்தறிவாளர் கலாநாதன்!
வளர்க அவர் தொடர்ந்த பணிகள்!

கி.வீரமணி
புரவலர்,
பகுத்தறிவாளர் கழகம்

சென்னை
7.3.2024 

குறிப்பு: மறைவுற்ற கலாநாதனின் உடல் இன்று (7.3.2024) பிற்பகல் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது விருப்பப்படி கொடையாக வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment