தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் "தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்" கழகப் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியில் "தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்" கழகப் பிரச்சாரக் கூட்டம்

featured image

சென்னை, மார்ச் 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அரும்பாக்கம் பகுதி யில் உள்ள சக்தி நகர் இந்திரா காந்தி தெரு இணையும் இடத் தில் 11.03.2024 அன்று மாலை 6 மணி அளவில் அன்னை மணியம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந்தியா மிழிஞிமிகி கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?’ தெரு முழக்கம் பெரு முழக்கமாகட் டும்” என்கின்ற தலைப்பில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையிலும் மாவட்டத் தலைவர் இரா வில்வநாதன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன் ஆகியோர் முன்னிலை யிலும் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற் புரையாற்றினார். வட சென்னை தோழர் துரைராஜ், வாசி ரவி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங் கடேசன் மற்றும் கழக செயல வைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி ஆகியோரின் உரைக்குப்பின் கிராமப் பிரச்சாரக் குழு கழக மாநில அமைப்பாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் ‘பாரதிய ஜனதா ஆட்சியால் நாடு சீரழிந்து கிடப்பதையும், மதவெறி தாண்டவம் ஆடு வதையும், வடமாநிலங்களில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் மலிந்து விட்டதையும், தொழில்நுட்ப (டிஜிட்டல்) முறையில் ஊழல் நடப்பதையும், அரசுத் துறைகளை ஏவல் துறைகளாக மாற்றி இருப்பதையும் எடுத்துக் கூறி, பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு, தந்தை பெரியாரின் சீரிய பங்களிப்பு ஆகியவற்றை விளக்கியும் அதனால் தமிழ் நாடும் மக்களும் கல்விலும் வேலைவாய்ப்பிலும் தொழில் நுட்பத்திலும் அறிவியல் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கு கின்றனர் என்பதை விளக்கிக் கூறி இதே போல் இந்தியா வையே திராவிட இந்தியாவாக மாற்ற வேண்டும், அதற்கு இந்த நல்வாய்ப்பை பயன்படுத் திக் கொண்டு ‘இந்தியா கூட்ட ணி’யை வெற்றி பெற செய்யும் வகையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்’. என்று கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.

சிறப்புரைக்கு நடுவே உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்பமை சந்திர சூட் அவர்களின் தீர்ப்பை பாராட்டி அனைவரையும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும்படி கூறியதைய டுத்து அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.

செயலவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆ.வீரமர்த்தினி அவர்களை பாராட்டும் வகையில் சிறப்பு அழைப்பாளராக வரவழைக் கப்பட்டு கூட்டமேடையில் பயனாடை அணிவித்து பாராட் டப்பட்டார்.
சிறப்பு பேச்சாளர் முனை வர் அதிரடி அன்பழகனுக்கும், பகுதி மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் ந.அதியமானுக்கும் பயனாடை அணிவித்து நூல் கள் வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட்டது.

துணைச் செயலாளர் சா.தாமோதரனின் 61ஆவது பிறந்த நாளை ஒட்டி அவரை பாராட்டும் வகையில் தாம்ப ரம் மாவட்ட நகரக் கழகம் சார்பில் தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்செல்வன் ஆகியோர் சட்டமிடப்பட்ட ‘தந்தை பெரியார்’ படத்தை வழங்கினர்.
மாநில திராவிடர் கழக தொழிலாளர் பேரவை பொரு ளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் ச.மாரியப் பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண் முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ந.மணிதுரை, மாணவர் கழகத் தலைவர் கு.ப.அறிவழ கன், சைதை தென்றல்,
மு. டில்லிபாபு, மா.சண்முகலட் சுமி, மு.பவானி (தலைவர், மாவட்ட மகளிர் பாசறை), அண்ணா நகர் அரங்க.சுரேந்தர், மேடவாக்கம் அரங்க.இராசா, மா.தமிழரசி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் தளபதி பாண்டியன், கோ. தங்கமணி, தங்க. தன லட்சுமி, முகப்பேர் டி.முரளி, க. செல்லப்பன், ச. சாம்குமார், இரா.அருள், க. இளவழகன், மு. செல்வி, ச.ச. அழகிரி, க. இளவரசன், து.கலையரசன், பெரியார் சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் பசும் பொன் மற்றும் திராவிட முன் னேற்றக் கழக 102, 103ஆவது வட்ட தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக வழக்குரைஞர் தங்க.இராஜா நன்றி கூறினார்.

நிகழ்வில் பங்கேற்ற அனை வருக்கும் சிற்றுண்டி வழங்கப் பட்டது.

No comments:

Post a Comment