விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை, மார்ச் 22 புதுக் கோட்டை மாவட்டம் இலுப் பூரில் உள்ள மேனாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று (21.3.2024) சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், குட்கா முறை கேடு, ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா, வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெ னவே வருமான வரித்துறையினர், தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத் துறை யினர் ஆகியோர்மேனாள் அமைச் சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தினர். அதில், பல்வேறு ஆவணங் களையும் கைப்பற்றி சென்றனர்.
இந்நிலையில், இலுப்பூரில் உள்ள மேனாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டுக்கு நேற்று காலை 7 மணிக்கு 3 கார் களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் விஜயபாஸ்கர் இல்லை. வீட்டில் இருந்த அவரது தந்தைசின்னத்தம்பி, தாயார் அம்மாக்கண்ணு ஆகியோரிடம் விசாரணைமேற்கொண்டனர். மேலும், அங்குநிறுத்தப்பட்டி ருந்த அவர்களுக்குசொந்தமான கார்களையும் திறந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள விஜயபாஸ் கருக்கு சொந்தமான கல்கு வாரிக்கு சென்றும் விசாரணை மேற்கொண் டனர். இரவு 7 மணியளவில் சோதனை நிறைவ டைந்தது.

No comments:

Post a Comment