கருநாடக அரசு பள்ளிப் பாடங்களில் மீண்டும் பெரியார் பாடங்களை வைத்த கருநாடக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

கருநாடக அரசு பள்ளிப் பாடங்களில் மீண்டும் பெரியார் பாடங்களை வைத்த கருநாடக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு

18-3

கருநாடக மாநிலத்தில் இருந்த முந்தைய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்போது, பாடப் புத்தகங்களில் சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார், நாராயணகுரு போன்றவர்கள் குறித்த பாடங்களை திட்டமிட்டே நீக்கியதோடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறித்த பாடங்களை இணைத்த அரசியல் அடாவடித்தனம் எல்லாம் புரிந்தே மக்கள் அந்த ஆட்சியைத் தோல்வியுறச் செய்தனர்.

6-52-229x300

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ‘டேரா’ போட்டுப் பிரச்சாரம் செய்தும் – காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று சித்தராமய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி தனி பலத்துடன் அமைந்தது. தென்னாடு “பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.ஸை” ஒரு போதும் ஏற்காது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சியில் முந்தைய அரசியல் அநீதிகளுக்குத் தக்க மாற்றங்களைச் செய்து – காவிக் கறைகளின் களங்கத்தைப் போக்கி வரும் வரிசையில் தந்தை பெரியார் போன்ற சமூகப் புரட்சியாளர்கள் குறித்த பாடங்களை மீண்டும் அதற்குரிய கம்பீரத்துடன் இடம் பெறச் செய்த கருநாடக அரசையும், அதன் முதலமைச்சர் மாண்புமிகு சித்தராமய்யா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் கல்வி அமைச்சர் முதலிய அனைவரையும் திராவிடர் கழகம் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகிறது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7.3.2024

No comments:

Post a Comment