4.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
♦ பாஜ வேட்பாளர் பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்; நான் டாக்டர் வேலைக்கே போறேன்… அரசியலை விட்டு விலகுவதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய மேனாள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு.
♦ வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் நேற்று அறிவித்துள்ளனர். இதன்படி, வரும் 6ஆம் தேதி மீண்டும் டில்லியை நோக்கி முன்னேற உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் சர்வான் சிங்க பாந்தர், ஜக்ஜித் சிங் டாலேவால் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், 10ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் நடக்கும் என்று அறிவித்தனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
♦ ‘மக்கள்தொகையில் 73 சதவீதம் உள்ள சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்றிய பாஜ அரசு புறக்கணிக்கிறது’ அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தைக் குறிப்பிட்டு, பீகாரில் எதிர்ப்புகளைக் கண்ட காங்கிரஸ் தலைவர், இந்த முயற்சி நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது என ராகுல் குற்றச்சாட்டு.
♦ ‘‘பாஜ பொய்களின் தொழிற்சாலை. அக்கட்சி தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை தருகிறார்கள். ஆனால் நாங்கள் பீகார் மற்றும் நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் வேலைகளுக்காக போராடுகிறோம்’ என லாலு பிரசாத் பேச்சு.
தி டெலிகிராப்
♦ பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து இந்திய ரயில்வேக்கான கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 107 சதவீத உயர்வு என காங்கிரஸ் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
♦ மகாராட்டிராவில் ஷிண்டே சிவசேனா – பாஜக இடையே விரிசல். தொகுதி உடன்பாடு எதுவும் செய்யாமல், பா.ஜ.க. தங்கள் ஆதிக்க தொகுதிகளில் வேட்பாளர் நியமனமா? முதலமைச்சர் ஷிண்டே காட்டம்.
♦ “கோவிட்-19 தொற்று நோய்களின் போது, மற்ற மாநிலங்கள் போராடிக் கொண்டிருந்த போது, முன்னணியில் நின்று, மாநிலத்தில் குறைந்த தாக்கத்தை உறுதி செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மணி அடிக்கவும், பாத்திரங்களை அடிக்கவும் மட்டுமே மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார். சென்னை மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, பா.ஜ.க. அரசு தமிழ் மக்களை புறக்கணித்தது என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கு.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment