திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு

18-11

கழகத் தலைவர் இரங்கல்

திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில் ஒருவரான மானமிகு தோழர்
மு. வடிவேலு அவர்கள் (91 வயது) முதுமையின் காரணமாக நேற்று (21.3.2024) மாலை காலமானார் என் பதை அறிந்து மிகவும் துயரப்படுகி றோம். மிகவும் அடக்கமும், கொள்கை உறுதியும் கொண்ட தோழர் வடிவேலு அவர்கள், வேலு சிட்பண்டு என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருபவர்.
அவர் தொடர்ந்த விடுதலை வாசகர். சில மாதங்களுக்கு முன் நேரில் சென்று அவருடைய நலம் விசாரித்தபோது நம்மிடம் விடுதலை சந்தா செலுத்தி மகிழ்ந்தார். மறைவுற்ற மு. வடிவேலு அவர்களது விழிகள் மருத்துவமனைக்கு கொடை அளிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவரை இழந்து வருந்தும் அவரது பிள்ளைகள் டி.வி. பன்னீர்செல்வம், டி.வி. செல்வகுமரன், டி.வி. கலைச்செல்வன், மகள்கள் பொற்செல்வி, ஜெயந்தி முதலிய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்றே நாம் அவருடைய மகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.3.2024
குறிப்பு: இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.

No comments:

Post a Comment