உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாவை எழுச்சியோடு நடத்திடுவது, விழாவுக்கு வருகைதரும்
தமிழர் தலைவருக்கு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பது
உடையார்பாளையம், மார்ச் 5- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் உடை யார்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
4.3.2024 திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங் கிய கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் கூட்டத் தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு. அறிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்துறைஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார்.மாநில ப.க. அமைப்பாளர் தங்கசிவ மூர்த்தி, தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனை செல்வன் ஆகியோர் கருத்து ரையாற்ற கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திர சேகரன் உடையார்பாளையம் வேலாயுதம், தமிழ் மறவர் பொன்னம்பலனார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் சிறப்புகளை எடுத்துக் கூறி முப்பெரும் விழா எழுச்சியோடு நடைபெற வேண்டியதன் அவ சியத்தை வலியுறுத்தி சிறப்புரை யாற்றினார்.
அரியலூர் மாவட்ட செய லாளர் மு. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், நூற்றாண் டைக் கடந்த சுயமரியாதைச் சுடரொளிகள் அன்னை மணி யம்மையார், உடையார்பாளை யம் மாவீரர் வேலாயுதம், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் தொண்டறம் போற்றி நடை பெறவுள்ள முப்பெரும் விழா வினை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் நடத்திட அனுமதி அளித்த தமிழர் தலைவருக்கு மிகுந்த நன்றியை இந்தக் கலந்துரை யாடல் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும், முப் பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்று கழக கொடியேந்தி சிறப்பான வரவேற்பினை அளிப்பதென முடிவு செய்யப் படுகிறது எனவும், உடையார் பாளையத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு குடும் பம் குடும்பமாக சென்று பொறுப்பாளர்களும் தோழர் களும் பங்கேற்பதெனவும், எதிர் வரும் 10.3.2024 அன்றுமாலை அரியலூர் மாவட்டம் உடை யார்பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, போக்குவரத்துத் துறை அமைச் சர் எஸ். எஸ். சிவசங்கர், சட்ட மன்ற உறுப்பினர்கள் கு.சின் னப்பா, க.சொ.க. கண்ணன், ஆகியோர் பங்கேற்கும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா, உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண் டறப் பாராட்டு விழா, தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் தொண்டறப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களை எழுச்சியோடும் சிறப்போடும் மாநாடு போல் நடத்திடுவதன வும் முடிவு செய்யப்பட்டது.
பங்கேற்றோர்
மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா. மதியழகன், செய லாளர் வெ. இளவரசன், மாவட்ட இளைஞரணி தலை வர் க.கார்த்திக், செயலாளர் லெ. தமிழரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத் தமிழ்செல்வன் ஒன்றிய செய லாளர் ராசா.செல்வகுமார், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் ஒன்றிய செய லாளர் தியாக.முருகன், து.செயலாளர் த.கு.பன்னீர் செல் வம், ஜெயங்கொண்டம் ஒன் றிய தலைவர் மா.கருணாநிதி, அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில் உடை யார்பாளையம் ஆசிரியர் ரவி செந்துறை ஒன்றிய அமைப் பாளர் சோ.க.சேகர்மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப் பாளர் மு.ராஜா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இளவழகன் ஒன்றிய அமைப் பாளர் சி. தமிழ் சேகரன் பர ணம் ராமதாஸ், பொன் பரப்பி சுந்தரவடிவேலு, உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment