பள்ளிகளிலேயே இனி ஆதார் கார்டு புதிய அரசாணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

பள்ளிகளிலேயே இனி ஆதார் கார்டு புதிய அரசாணை வெளியீடு

featured image

சென்னை, மார்ச்.13- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதினார். அதில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கும் அனைத்து நிலை மாணவர்களும் இடை நிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறது.

ஊக்கத் தொகைகள் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் நடைமுறை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இதற்கு, மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவை. அதேநேரம், வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் அட்டை அவசியம். இதனால், அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 வரை படிக்கும் 1.25 கோடி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது அவசியமாகிறது.
இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து 770 ஆதார் பதிவு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ் நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தெரிவித்தது.

இந்த நிலையில், ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்புமுன்னெடுப்பின் கீழ் அனைத்து மாணவர்களும் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு, புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தினை கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மேற்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப் பித்துள்ளது.

இதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment