பட்டுக்கோட்டை, மார்ச் 17- பட்டுக் கோட்டை மாவட்டப் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி 13.2.2024 செவ்வாய்க் கிழமை காலை 10 மணி அளவில் பட்டுக்கோட்டை .ஏனாதி – ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற் றது.
ஆ.இரத்தின சபாபதி தலைமை வகித்தார். மாவட்டப்பகுத்தறி வாளர் கழக தலைவர் புலவஞ்சி. இரா..காமராஜ் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப் பினர்அரு.நல்லதம்பி, நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி வை..சேகர், கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன், ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக தொழிலாளர் அணி அமைப் பாளர் முத்து.துரைராஜ், நகர திராவிடர் கழக செயலாளர் கா.தென்னவன், பட்டுக் கோட்டை ஒன்றிய கழக செய லாளர் ஏனாதி சி.. ரெங்கசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் என்.கே.ஆர், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ரெ.திருமேனி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏனாதி இராஜப்பா கல்லூ ரியின் செயலாளர் பி.கணேசன் போட்டியைத் தொடங்கி வைத்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகை தந்த மாணவர் களை ஊக்கப் படுத்தி பெரியா ரால் நாம் எப்படி பயன் அடைந் தோம் என்பதை மிகச் சிறப்பாக பேசி தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் மாநில கழக கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன்., பகுத்தறி வாளர் கழக மாநில அமைப் பாளர் ஆசிரியர் சி.இரமேஷ் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.
பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில்,
பட்டுக்கோட்டை காதர் முகைதீன் கல்லூரி மாணவர் மா.மணிகண்டன் முதல் பரிசான ரூ.2000 பரிசினைப் பெற்றார்.
ஏனாதி ராஜப்பா கல்லூரி மாணவி.சி.பாண்டி செல்வி இரண்டாம் பரிசான ரூபாய்: 1500 பரிசினைப் பெற்றார்.
காதர் முகைதீன் கல்லூரி மாணவர் ஆ.தன்ஸிரா என்ற மாணவி இரண்டாம் பரிசான ரூபாய் 1500 பரிசினை இருவரும் பெற்றார்கள்.
சிறீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி மாணவி இ.மாளவிகா மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 .பரிசினையும், பேரா வூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் பி.அகிலேஸ் வரன். சிறப்பு பரிசாக ரூபாய் 500 பரிசாக பெற்றார்கள்.
No comments:
Post a Comment