புதுடில்லி, பிப்.12 புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார்.
மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9.3.2024 அன்று திடீரென தனது பதவியிலிருந்து விலகினார். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக வுள்ள நிலையில் 2 ஆணையர் பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் காங் கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டுமார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்,இந்திய தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது மனுவில், “மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என் பதால், புதிய தேர்தல் ஆணையர் களை உடனடியாக நியமிக்கவேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேர் தல் ஆணையர் நியமன நடைமுறை தொடர்பாக அனூப் பரன்வால் – ஒன்றிய அரசுக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு, மார்ச் 2-ஆம் தேதி தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையர்களை உடனே நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தற் போது காலியாக உள்ள 2 ஆணையர் பதவிகளும் மார்ச் 15ஆ-ம் தேதிக்குள் நிரப்பப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஜெயா தாக்குர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தலை மையில் உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் விவகார அமைச்சகத்தின் கேபினட் செய லாளர்களை கொண்ட தேடல் குழு, இரண்டு பதவிகளுக்கும் தலா 5 பெயர்கள் கொண்ட இரண்டு தனித்தனி பட்டியல்ளை தயார் செய்யவுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறாத வகையில் ஒன்றிய அரசு இயற்றிய புதிய சட்டம் அண்மையில் நடை முறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment