சென்னை, மார்ச் 4- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஏற் பாடு செய்த இன்ஸ்டா கிராம் நேரலை நிகழ்ச்சி மூலம், பொதுமக்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதில் அளித்து பேசினார்.
பூமி வாழ முடியாத தாக மாறுவது குறித்து கேட்ட கேள்விக்கு, சோம்நாத் பதில் அளித்து பேசும்போது, ‘முதலில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து உறுப்புகளை யும் (கோள்கள், நிலவு மற்றும் சூரியன்) பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பின் னர் நட்சத்திரத்தைச் சுற் றியுள்ள விண்வெளி பகு திகள் உள்பட மற்ற விட யங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பூமி இன்னும் வாழக்கூடிய தாக இருந்தாலும் கூட, பிற கோள்கள் மற்றும் வாழ்வதற்கான இடங் களை ஆய்வு செய்ய வேண்டும்.
விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்து வதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும். வருகிற 2035ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தை உருவாக்கவும், 2040ஆம் ஆண்டு நிலவில் மனி தனை தரையிறக்கவும் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. விண்வெளி சுற்றுலாவின் வாய்ப்புகள் சோதிக்கப்பட உள்ளது.
விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டவுடன், அனைத்து சவால்களை யும் கையாள சரியான பயிற்சியுடன் விண்வெ ளிக்கு செல்லும் நபர்கள் தேவைப்படும். இதனால் நூற்றுக்கணக்கான சோத னைகளும் இடம் பெறும்.
இஸ்ரோவில் சேரு வது அல்லது விண்வெளித் துறையின் ஒரு பகுதியாக மாறுவது எப்படி என்பது குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்த சோம்நாத், முதலில் நல்ல கல்வித் தரங்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண் டும். பின்னர் குறிப்பிட்ட திறன்களை உருவாக்க வேண்டும் என்று மாண வர்களை வலியுறுத்தி னார். மேலும் அவர், “ஒவ் வொரு ஆண்டும் இஸ்ரோ பணியமர்த்தும் போது மனிதவளம் குறைவாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண் டும். நாங்கள் அழைக்கும் ஒவ்வொரு 100 பதவிக ளுக்கும் சுமார் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்க ளைப் பெறுகிறோம்” என்று அவர் பேசினார்.
No comments:
Post a Comment