வேலூர், மார்ச் 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நேற்று (2.3.2024) குடியாத்தம் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் “மாணவர்கள் ஆரோக் கியமாக வாழ வழி” கருத்தரங்கம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி தலைமை உரையுடன் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வி. திருமலை அனைவரையும் வரவேற்றார்
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் பெ.தனபால், குடியாத்தம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார், வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி. சடகோபன், கல்லூரி செயலர் எம்.பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய நோக்க உரையில் மாண வர்கள் பகுத்தறிவு சிந்தனையோடு கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந் தினராக கலந்துகொண்ட வேலூர் மாவட்ட மனநல மருத்துவர் சிவாஜி ராவ், அரசு தலைமை மருத்துவமனை குடியாத்தம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், மாணவர்களின் உடல் ஆரோக் கியம், மனநலம், உணவுப் பழக்க வழக்கம் குறித்த ஆலோசனை மற்றும் கூல் லிப்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் குறித்தும் அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றியும் விளக்கமாக பேசினார். இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார் கள். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். முடிவில் எஸ். ரேஷ்மா நன்றி உரையாற் றினார்.
Sunday, March 3, 2024
Home
கழகக் களத்தில்
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி" கருத்தரங்கம்
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி" கருத்தரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment