மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2-4

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.3.2024) மயிலாடுதுறையில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே. ராஜாராமன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment