சென்னை, மார்ச் 7- உயர்நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், உயர்நீதி மன்ற தமிழ் வழக்குரைஞர்கள் செயற்பாட்டுக் குழு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டு அரங்கம் அருகில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.
திராவிடர் கழக துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர் கள் அந்நிகழ்வில் 5.3.2024 அன்று கலந்துகொண்டு அவர்களது கோரிக் கையை ஆத ரித்து உரையாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலை வர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகி யோரும் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் போராட்டம்
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி தருமபுரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி, வழக் குரைஞர்கள் நடத்தும் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தர்மபுரி மாவட்டம், மாட் லாம்பட்டியிலுள்ள தர்மபுரி அரசு சட்டக்கல்லூரி முன்பு, கல்லூரி மாணவ -மாணவிகள் ஒன்றிணைந்து, கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரத்தில் போராட்டம்
4.3.2024 காலை 9.30 மணியளவில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 50க்கு மேற்பட்டோர் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குக என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னையில் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய வழக்குரைஞர்கள் மற் றும் சட்டக் கல்லூரி மாணவர் களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரியும் அறப்போராட்டத்தில் ஈடு பட்டனர்.
No comments:
Post a Comment