கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

13-4

சென்னை, மார்ச் 5- கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன் றாம் பாலினத்தவர்களின் எண் ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பதை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் மூன் றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.
இதனடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (5.3.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து கொள்கை முடிவை விரை வாக எடுக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17ஆ-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment